
காதலர்களின் டேட்டிற்கு ஸ்பான்சர் செய்த சப்-வே நிறுவனம்; வைரலான ட்விட்டர் பதிவு
செய்தி முன்னோட்டம்
தனியார் நிறுவனங்கள், தங்கள் இருப்பை வெளிக்காட்ட, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சுவாரசிய பதிவுகளை விடுவதுண்டு.
சமீபத்தில், சப்-வே இந்தியா நிறுவனம், ட்விட்டரில் தங்களை டேக் செய்த காதல் ஜோடிக்கு, ஒரு உறுதி அளித்தது.
வடமாநிலத்தை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, சண்டைக்கு பிறகு, சப்-வேயின் 'சப்' உணவை வாங்கி கொடுத்து சமாதானம் செய்ததாக ட்விட்டர் பதிவை இட்டனர்.
அதன் தொடர்ச்சியாக சப்-வே நிறுவனம், அந்த காதல் ஜோடியின் ட்விட்டர் பதிவிற்கு 1000லைக்குகள் கிடைத்தால், அவர்கள் டின்னர் டேட்டிற்கு இலவசமாக ஸ்பான்சர் செய்வதாக உறுதி அளித்தனர்.
அதன்படி அந்த ஜோடியின் பதிவும் பல ஆயிரம் லைக்குகள் பெறவே, அவர்கள் அளித்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றி உள்ளனர். சப்-வே நிறுவனத்தின் இந்த பதிவும் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
சப்-வே இந்தியாவின் வாக்குறுதி
1000 likes and we will sponsor a date for these cuties ❤️ https://t.co/VyYYO0lSQ2
— Subway India (@SubwayIndia) June 15, 2023
ட்விட்டர் அஞ்சல்
வாக்குறுதியை நிறைவேற்றிய சப்-வே இந்தியா
there you go <3 https://t.co/p70SH0NHJE pic.twitter.com/3DLQaY35nY
— Subway India (@SubwayIndia) June 18, 2023