உலகம் முழுவதும் உண்ணப்படும் சில விசித்திரமான உணவுகள்
ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரை, உங்களை மயக்கமடைய செய்யும் சில வினோதமான உணவுகளை மக்கள் உண்ணுகிறார்கள். நம்மூர் தோசை, இட்லியை போல, அதை ருசித்து உண்ணும் கூட்டமும் உண்டு. அந்த குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் போது, இதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். அந்த உணவின் பெயரையும், அதன் செய்முறையும் கேட்டால், இதையெல்லாமா மனுஷன் திம்பான்? என கேட்க தோன்றும்.ஆனால், அதையும் உண்ணும் மக்கள் இருக்கிறார்கள். அப்படி சில விந்தையான உணவு வகைகள் இதோ: பாறைகள், கஜகஸ்தான்: கஜகஸ்தானில் சிலர் பாறைகளை சாப்பிடுகிறார்கள். ஆம், நீங்கள் படித்தது சரிதான், பாறைகள்! இந்த பாறைகள் களிமண்ணால் ஆனவை. உள்ளூர்வாசிகள் சிலர், இந்த களிமண் பாறையில் இரும்பு நிரம்பியுள்ளது, இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று கூறுகின்றனர்.
அழுகிய முட்டைகள் முதல் குளவி பிஸ்கெட் வரை
செஞ்சுரி முட்டைகள், சீனா: பல ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட அழுகிய முட்டைகள், சீனாவில் மிகவும் பிரபலமான உணவாகும். முட்டைகளை பல மாதங்களுக்கு களிமண், சாம்பல் மற்றும் சுண்ணாம்பு கலவையில் சேமித்து வைக்கின்றனர். இதன் விளைவாக மஞ்சள் கரு, மெலிதான கரும் பச்சை மஞ்சள் நிறமாக மாறுகிறது. அதே போல, வெள்ளை கருவும், கரும் பழுப்பு நிறத்தில் ஜெல்லியாக மாறிவிடும். வறுத்த சிலந்திகள், கம்போடியா: கம்போடியாவில் உள்ள ஸ்குவான் நகரில், பலரால் விரும்பப்படும் ஒரு உணவு தான், வறுத்த சிலந்தி. சிலந்திகளளை MSG, சர்க்கரை மற்றும் உப்பு கலவையில் மேரினேட் செய்து அதை பின்னர் பூண்டுடன் வறுக்கவும். குளவி குக்கீகள், ஜப்பான்: ஜிபாச்சி சென்பேய் என்று அழைக்கப்படும், இதில் முட்டை, குளவி, சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.