LOADING...
ஒரு வருடமாக பழைய சாதத்தை உண்ணும் ZOHO நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு!
தனது டயட் பற்றி ட்வீட் செய்த ஸ்ரீதர் வேம்பு

ஒரு வருடமாக பழைய சாதத்தை உண்ணும் ZOHO நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு!

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2023
12:35 pm

செய்தி முன்னோட்டம்

ZOHO நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்ரீதர் வேம்பு, எளிமைக்கு பெயர் போனவர். அவர் தனது மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தின் தலைமையகத்தை, தென்காசிக்கு அருகே ஒரு மண் வீட்டில் தான் நடத்தி வருகிறார். மேலும், அவர் போக்குவரத்திற்கு சைக்கிளை பயன்படுத்துகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் தற்போது பழைய சாதத்தை பற்றி பதிவிட்ட ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், கடந்த ஒரு வருடமாக, தினமும் பழைய சாதத்தை தான் உண்ணுவதாகவும், அது தன்னுடைய குடலுக்கும், ஜீரணத்திற்கும் உதவுவதாகவும் பதிவிட்டு இருந்தார். பழைய சாதத்திற்கு பல மருத்துவ குணங்கள் உண்டு என மருத்துவர்கள் தெரிவிக்கும் இந்நிலையில், ஸ்ரீதர் வேம்புவின் டயட் குறித்த இந்த பதிவு இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஸ்ரீதர் வேம்பு பதிவு