
புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'சோயா 65' செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
உணவு குறிப்புகள்: சோயா சங்க்ஸ் என்பது அசைவ உணவகளுக்கான சிறந்த மாற்று உணவுகளில் ஒன்றாகும். இதில் ஊட்டச்சத்துகளும் அதிகம். இந்த சோயா சங்க்ஸை வைத்து 'சோயா 65' எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சோயா துண்டுகள்(மீல் மேக்கர்) - 50 கிராம்
சமையல் எண்ணெய்
மாவு கலவைக்கு தேவையான பொருட்கள்:
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
சோள மாவு - 1/2 தேக்கரண்டி
தயிர்- 1 தேக்கரண்டி
கடலை மாவு- 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள், உப்பு மற்றும் தண்ணீர்- தேவைக்கேற்ப
ட்ன்வ்ஜ்
'சோயா 65' செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, தீயை அணைத்துவிட்டு சோயா துண்டுகளை சேர்க்கவும்
சோயா துண்டுகளை 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும்.
அதன் பிறகு, சோயாவில் இருக்கும் அதிகப்படியான தண்ணீரைப் பிழிந்துவிட்டு, அவற்றை விழுதாக அரைக்கவும்.
அரைத்த சோயாவை ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றி, 'மாவு கலவைக்கு தேவையான பொருட்கள்' என்பதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களையும் அதோடு சேர்க்கவும்.
பின்னர், சோயா மாவு கலவையை கட்டியான சிறு உருண்டைகளாக பிடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கி, தயார் செய்து வைத்திருக்கும் சோயா உருண்டைகளை பொன்னிறமாக வறுக்கவும்.
அதன் பின், வறுத்த சோயா 65யில் இருக்கும் எண்ணெயை வடிகட்டி, சுடசுட பரிமாறவும்.