
உங்கள் உடலில் ஏற்படும் புறக்கணிக்கக்கூடாத சில அறிகுறிகள்
செய்தி முன்னோட்டம்
உங்கள் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் உங்கள் உடல்நிலையை உங்களுக்கு உணர்த்தும் அறிகுறிகளாகும்.
உதாரணத்திற்கு, திடீர் எடை இழப்பு முதல் உரத்த குறட்டை வரை இத்தகைய அறிகுறிகளை புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவ நிபுணர்களை கலந்தாலோசிப்பது அறிவுறுத்தப்படுகிறது.
நீங்கள் புறக்கணிக்கக் கூடாத சில அறிகுறிகளின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம்; உங்களுக்கு உடனடி மருத்துவ உதவி தேவை என்று உங்கள் உடல் கூறும் மொழிகள் அவை.
மந்தமான பேச்சு: மந்தமான பேச்சு போன்ற அறிகுறிகள் தீவிரமான நிலையை சுட்டிக்காட்டலாம். அதற்கு காரணமாக குறைந்த சோடியம் அளவுகள், இரத்த சர்க்கரை, கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள், இரத்தத்தில் அதிக அம்மோனியா அளவுகள் என எதுவேண்டுமானாலும் இருக்கலாம். எனவே, இந்த அறிகுறி ஒரு அவசரநிலையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
அறிகுறிகள்
புறக்கணிக்கக்கூடாத சில அறிகுறிகள்
நெஞ்சு வலி: திடீர் நெஞ்சு வலியானது இதயப் பிரச்சினை அல்லது மாரடைப்பு சம்மந்தமாக இருக்கக்கூடும். திடீர் மார்பு வலி, தாடையிலிருந்து தொப்புள் வரை பரவி எரியும் உணர்வு அல்லது மார்பில் கனத்துடனும், சில சமயங்களில் வலது, இடது கைக்கும் பரவும் போது காலம்தாழ்த்தாமல் மருத்துவமனைக்கு விரைய வேண்டும்.
எடை இழப்பு: திடீரென ஏற்படும் அதிகப்படியான எடை இழப்பு தைராய்டு கோளாறுகள், நீரிழிவு நோய், இரைப்பை குடல் நோய்கள் போன்ற அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளைக் குறிக்கலாம். சில நேரங்களில் அது புற்றுநோயாக கூட இருக்கலாம்.
சிறுநீர் அல்லது மலத்தில் இரத்தம்:சிறுநீர் அல்லது மலத்தில் இரத்தம் வெளிவந்தால், இரைப்பை குடல் இரத்தப்போக்கு, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் அல்லது பெருங்குடல் புற்றுநோய் போன்ற மிகவும் தீவிரமான நிலைமைகளைக்குறிக்கலாம்.
அறிகுறிகள்
புறக்கணிக்கக்கூடாத சில அறிகுறிகள்
மூச்சுத் திணறல்: நீங்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்தால், நுரையீரல் தொற்று, நிமோனியா, இதய செயலிழப்பு அல்லது இரத்த சோகை அல்லது சிறுநீரக செயலிழப்பு காரணமாகவும் இருக்கலாம்.
கரகரப்பான குரல் அல்லது இருமல்: ஒருமுறை கரகரப்பான குரல் அல்லது இருமல் இருந்தால் அது பெரிய விஷயமில்லை. இருப்பினும், உங்களுக்கு தொடர்ந்து கரகரப்பு அல்லது இருமல் இருந்தால், அது சுவாச தொற்றுகள், ஒவ்வாமை, தொண்டை புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது
உரத்த குறட்டை: குறட்டை விடுவது பொதுவானது, அதிக சத்தமாக அல்லது இடையூறு விளைவிக்கும் குறட்டையானது தூக்கத்தில் மூச்சுத்திணறலைக் குறிக்கலாம். இது உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு, நீரிழிவு நோய் மோசமடைதல் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.