Page Loader
ஜங்க் ஃபுட் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை கண்டறியும் கருவியை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்
ஜங்க் ஃபுட் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு

ஜங்க் ஃபுட் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை கண்டறியும் கருவியை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்

எழுதியவர் Sekar Chinnappan
May 26, 2025
06:27 pm

செய்தி முன்னோட்டம்

ஊட்டச்சத்து ஆராய்ச்சியை மாற்றக்கூடிய ஒரு திருப்புமுனையாக, அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) விஞ்ஞானிகள் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளைப் பயன்படுத்தி ஒரு நபர் எவ்வளவு அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவை, அதாவது ஜங்க் ஃபுட்டை உட்கொள்கிறார் என்பதை கண்டறியும் ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளனர். PLOS மருத்துவத் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், உணவு உட்கொள்ளலை மதிப்பிடுவதற்கு வளர்சிதை மாற்றங்களை, உடலில் காணப்படும் சிறிய பொருட்களை அளவிடும் பாலி-மெட்டாபொலைட் மதிப்பெண் எனப்படும் பயோமார்க்கர் அடிப்படையிலான கருவியை அறிமுகப்படுத்துகிறது. இந்த அணுகுமுறை பாரம்பரியமாக நபரிடம் கேட்டு குறிப்பெடுப்பதை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவை பெரும்பாலும் நினைவாற்றல் குறைபாடுகள் அல்லது குறைவான அறிக்கையிடல் காரணமாக சரியாக தெரிவிக்க முடியாத சூழல் உள்ளது.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி விபரங்கள்

இந்த ஆராய்ச்சி இரண்டு குழுக்களை உள்ளடக்கியது. ஒரு கண்காணிப்பு ஆய்வில் இருந்து 718 வயதான பெரியவர்கள் மற்றும் இரண்டு வாரங்களுக்கு அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகள் (80%) அதிகமாக உள்ள உணவைப் பின்பற்றிய அல்லது இல்லாத மருத்துவ பரிசோதனையில் இருந்து 20 பங்கேற்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான வளர்சிதை மாற்றங்களை இந்த குழு அடையாளம் கண்டுள்ளது மற்றும் பாலி-மெட்டாபொலைட் மதிப்பெண்ணை உருவாக்க இயந்திர கற்றலைப் பயன்படுத்தியது. இது அதிக மற்றும் குறைந்த தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்ளலை தெளிவாக வேறுபடுத்துகிறது. குளிர்பானங்கள், தொகுக்கப்பட்ட சிற்றுண்டிகள் மற்றும் சாப்பிடத் தயாராக உள்ள உணவுகள் போன்ற தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்களுக்கும் காரணமாக உள்ளன.

நம்பகத்தன்மை 

ஆய்வின் நம்பகத்தன்மை 

உட்கொள்ளலை துல்லியமாக அளவிடுவது இந்த உடல்நல பாதிப்புகளை ஆராயும் ஆய்வுகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்தலாம். இருப்பினும், கண்டுபிடிப்புகள் தற்போது அமெரிக்க பெரியவர்களுக்கு மட்டுமே என்றும், பரந்த மக்கள்தொகை முழுவதும் சரிபார்ப்பு தேவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். எதிர்கால ஆய்வுகள் இந்த மதிப்பெண்கள் நோய் அபாயத்துடன் எவ்வாறு தொடர்புடையவை என்பதை ஆராயும். இருப்பினும், கண்டுபிடிப்புகள் புறநிலை, துல்லியமான ஊட்டச்சத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கின்றன. இதில் உங்கள் நினைவகம் அல்ல, உங்கள் உடல், நீங்கள் சாப்பிடுவதை வெளிப்படுத்துகிறது.