LOADING...
குளிர்காலத்தில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சாப்பிடுவது நல்லதா? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
குளிர்காலத்தில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சாப்பிடுவது நல்லது

குளிர்காலத்தில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சாப்பிடுவது நல்லதா? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

எழுதியவர் Sekar Chinnappan
Dec 19, 2025
01:47 pm

செய்தி முன்னோட்டம்

குளிர்காலத்தில் நமது உடல் வெப்பநிலையைப் பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வெல்லம் ஒரு சிறந்தத் தேர்வாகக் கருதப்படுகிறது. சர்க்கரையானது வெறும் கலோரிகளை மட்டுமே வழங்கும் வேளையில், வெல்லத்தில் இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை குளிர்காலத்தில் ஏற்படும் உடல் சோர்வைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலுக்குத் தேவையான வெப்பத்தை வழங்கவும் உதவுகின்றன.

நோய் எதிர்ப்பு

செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி

வெல்லம் நமது உடலில் உள்ளச் செரிமான நொதிகளைத் தூண்டி, உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும், இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, குளிர்காலத் தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. குறிப்பாகப் பால் அல்லது டீயில் சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தைச் சேர்த்துப் பருகுவது, சளி மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அமையும்.

எச்சரிக்கை

கவனிக்க வேண்டிய எச்சரிக்கைகள்

வெல்லம் சர்க்கரையை விடச் சிறந்தது என்றாலும், இதிலும் கலோரிகள் அதிகம் என்பதால் மிதமான அளவிலேயே உட்கொள்ள வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் வெல்லத்தைச் சாப்பிடும் முன் மருத்துவரை ஆலோசிப்பது அவசியம். ஏனெனில் இதுவும் இரத்தச் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும். சந்தையில் கிடைக்கும் ரசாயனம் கலந்த வெல்லத்தைத் தவிர்த்து, ஆர்கானிக் அல்லது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட வெல்லத்தைத் தேர்ந்தெடுப்பது ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது.

Advertisement