
புரட்டாசி ஸ்பெஷல்: குட்டிஸ்களை கவரும் ஸ்டஃப்டு குடைமிளகாய்
செய்தி முன்னோட்டம்
வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பல பெற்றோருக்கும் இமயமலை போராட்டமாக இருக்கும்.
தற்போது இருக்கும் குழந்தைகளுக்கு வெளியில் ஆர்டர் செய்யும் உணவும், ஜங்க் ஃபுட்களும் தான் விருப்ப தேர்வாக உள்ளது.
ஆனால் எப்போதும் பிள்ளைகளுக்கு அதையே வாங்கி தருவது பெற்றோர்களான நமக்கு தவறு என தெரியும். இருப்பினும் பிள்ளைகள் ஆசையை தவிர்க்க முடியாமல், எதையோ சாப்பிட்டா சரி என நினைக்கும் பெற்றோர்களும் உண்டு.
அதே ஹோட்டல் ஸ்டைலில் சுவையான, அதே சமயம் ஆரோக்கியமான உணவை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து விட்டால்?
ஸ்பெயின் நாட்டின் பிரபலமான உணவான இந்த ஸ்டஃப்டு கேப்ஸிகமை(Stuffed Capsicum) உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு செய்து தாருங்கள். அவர்கள் தினசரி இதேயே கேட்பார்கள்!
card 2
தேவையான பொருட்கள்
ஸ்டஃப்பிங் செய்வதற்கு:
2 தேக்கரண்டி எண்ணெய்
½ வெங்காயம், பொடியாக நறுக்கியது
1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
½ தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்
¼ தேக்கரண்டி மஞ்சள் தூள்
ருசிக்கேற்ப உப்பு
¾ தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
¼ தேக்கரண்டி சீரக தூள்
2 உருளைக்கிழங்கு , வேகவைத்து மசிக்கவும்
¼ தேக்கரண்டி கரம் மசாலா தூள்
½ தேக்கரண்டி ஆம்சூர் தூள்
1 கப் பனீர் உதிர்த்துவிட்டது
மற்ற பொருள்கள்:
4 சிறிய கேப்சிகம், விருப்பமான நிறம்
3 டீஸ்பூன் எண்ணெய்
கையளவு மொஸரெல்லா / செடார் சீஸ்
card 3
செய்முறை
முதலில், எண்ணெயில் வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுதை வதக்கி கொள்ளவும்.
பின்னர் அதனோடு மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். மசாலா வாசனை வரும் வரை குறைந்த தீயில் வதக்கவும்.
கூடுதலாக, வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் நொறுக்கப்பட்ட பனீர் சேர்க்கவும்.
மசாலா நன்கு கலக்கப்படும் வரை நன்கு கலக்கவும்.
பின்னர் அதை தனியாக ஆறவிடவும்.
மறுபுறம், குடைமிளகாயின் தலை பகுதியை வெட்டி எடுத்து, உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும்.
இப்போது 2 டீஸ்பூன் தயாரிக்கப்பட்ட மசாலாவை அதனுள் வைத்து நிரப்பவும்.
இப்போது ஸ்டஃப் செய்யப்பட்ட குடைமிளகாகளை, 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு கடாய் மீது வைக்கவும்.
கூடவே, குடைமிளகாயின் தலை பகுதியை மூடி வைக்கவும்.
card 4
செய்முறை
இந்த கடாயை ஒரு மூடி போட்டு, 30 நிமிடங்கள் இளம்தணலில் வேகவைக்கவும்.
குடைமிளகாயை அதன் நிறம் மாறும் வரை சமைக்கவும்.
அதன் தோல் பகுதி சிறிது சுருங்கியபடி இருந்தால் தான் முழுதாக வெந்ததாக அர்த்தம்.
இப்போது தலை பகுதியை எடுத்துவிட்டு, கேப்ஸிகம் உள்ளே துருவி வைத்த மொஸரெல்லா சீஸ் தூவி அலங்கரித்து மீண்டும் கேப்சிகத்தின் தலைபகுதியை வைத்து மூடிவிடவும்.
மறுபடியும் கடாயை மூடி, 5 நிமிடங்கள் அல்லது சீஸ் முழுவதுமாக உருகும் வரை இளம் தீயில் வேக விடவும்.
இறுதியாக, புலாவ் அல்லது நாண் உடன் இந்த சீஸி ஸ்டஃப்டு கேப்சிகத்தை பரிமாறவும்.