புரட்டாசி ஸ்பெஷல்: 'ஈரோடு அம்மன் மெஸ்' புகழ் ஜப்பான் காலிபிளவர் செய்முறை
செய்தி முன்னோட்டம்
இணையத்தில் பலவித உணவுகளும், அதன் செய்முறையும் வைரலாகி வருகிறது.
அந்த வரிசையில், தற்போது இணையத்தில் பிரபலமான உணவு, ஈரோடு அம்மன் மெஸ் புகழ் ஜப்பான் சிக்கன்.
ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பலரும் அசைவ உணவு சமைப்பதையோ, உண்பதையோ விரும்ப மாட்டார்கள்.
அவர்களுக்கென்றே பிரேத்யேகமாக, அதே சுவையில், காலிபிளவர் சேர்த்து, ஜப்பான் காலிஃப்ளவர் செய்வது எப்படி என பார்ப்போமா?
இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்ப கூடிய ஒரு உணவாகும்.
card 2
தேவையான பொருட்கள்
1 டீஸ்பூன் வெண்ணெய்
10 பல் பூண்டு (பொடியாக நறுக்கியது)
5 பச்சை மிளகாய் (கீறியது)
2 கப் பால்
¼ கப் முந்திரி தூள்
சுவைக்கேற்ப உப்பு
½ தேக்கரண்டி சர்க்கரை
1 தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள்
1 காளிஃபிளவர் சுத்தம் செய்யப்பட்டது
2 டீஸ்பூன் மைதா மாவு
4 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார்
card 3
செய்முறை
நறுக்கிய காளிஃபிளவர் துண்டுகளை ஒரு அகண்ட பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அதனுடன், உப்பு, வெள்ளை மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், கார்ன்ஃப்ளார், மைதா மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சிறிது கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
ஒரு கடாயில், ஆழமாக வறுக்க எண்ணெயை சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள காளிஃப்ளவரை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக 5 முதல் 6 நிமிடங்கள் வரை வறுக்கவும்.
card 4
ஜப்பான் சாஸ்: செய்முறை
ஜப்பான் சாஸ் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சூடாக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
அதில் பச்சை மிளகாயை சேர்க்கவும்.
இப்போது மிதமான தீயில், பால், முந்திரி தூள், உப்பு, சர்க்கரை மற்றும் வெள்ளை மிளகு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கலக்கவும்.
கலவை சிறிது கெட்டி பதம் ஆகும் வரை, கலக்கவும்.
இப்போது இந்த கலவையில், வறுத்து வைத்துள்ள காளிஃபிளவர் சேர்த்து, நன்றாக கலக்கவும். பின்னர் மூடி வைத்து, குறைந்த அனலில், 3 -4 நிமிடங்கள் வரை சமைக்கவும். சூப்பரான ஜப்பான் காளிஃபிளவர் தயார்!