
குழந்தைகளை கவர பேக்ட் ஜாக்கெட் பொட்டேட்டோ செய்வோமா?
செய்தி முன்னோட்டம்
பெற்றோர்களுக்கு இப்போதுள்ள குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது இமாலய சிந்தனை போன்றது.
பல குழந்தைகள், காய்கறிகளையும், வீட்டில் செய்யும் உணவுகளையும் விரும்புவதில்லை. பல குழந்தைகள் அசைவ பிரியர்களாகவே உள்ளனர்.
அவர்களுக்காகவே பேக்ட் ஜாக்கெட் பொட்டேட்டோ (Baked Jacket Potato) ரெசிபி.
வேகவைத்த உருளைக்கிழங்கில், உங்களுக்கு பிடித்த காய்கறிகளை ஸ்டஃப் செய்து, மேலே சீஸ் தூவி தர, குழந்தைகள் இதை மீண்டும் வேண்டும் என கேட்பார்கள்.
இதில் புரதம், கார்போஹைட்ரெட்ஸ் போன்ற சத்துகளும் அடங்கியுள்ளதால், பெற்றோர்கள் ஆரோக்கியம் பற்றி கவலைக்கொள்ள தேவை இல்லை.
மேலும் இது எண்ணையில் பொறிக்க போவதில்லை, மாறாக வேக வைக்கப்படும் உணவு என்பது கூடுதல் ஸ்பெஷல்.
card 2
தேவையான பொருட்கள்
பெரிய உருளைக்கிழங்கு - 4
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மயோனைஸ் - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
ஆரிகனோ - 1 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
சீஸ் - 1/2 கப் (துருவியது)
குடைமிளகாய்- 1 (பொடியாக நறுக்கியது),
வேக வாய்த்த கார்ன்(corn) - ஒரு கையளவு
card 3
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை நீரில் நன்கு கழுவி, அதை நன்கு உலர்த்திக் கொள்ள வேண்டும் (தோல் நீக்க வேண்டாம்).
பின் அவற்றை இரண்டு துண்டுகளாக, நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
பேக்கிங் ட்ரேயில், இந்த உருளைக்கிழங்குகளை வைத்து, அதன் மேல் எண்ணெய் தடவி, சிறிது உப்பு தூவ வேண்டும்.
பின்பு 180 டிகிரியில் ப்ரீஹீட் செய்யப்பட்ட ஓவனில் இந்த ட்ரேயை வைத்து 25-30 நிமிடம் வைத்து எடுக்கவும்.
இப்போது உருளை கிழங்கு நன்றாக வெந்திருக்கும்.
பேக்கிங் ட்ரே-ஐ வெளியே எடுத்து, உருளை கிழங்கை ஆறவிடவும் .
card 4
செய்முறை:
பின்னர் ஒரு கிண்ணத்தில், மயோனைஸ், வெண்ணெய், நறுக்கிய பூண்டு, ஆரிகனோ, சில்லி ப்ளேக்ஸ், நறுக்கிய குடைமிளகாய், கார்ன், தக்காளி சாஸ், சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின் வேக வைத்து, ஆறிய உருளைக்கிழங்கின் தசைப்பகுதியை மட்டும் ஒரு ஸ்பூன் கொண்டு, ஒரு குழிபோல தோண்டி எடுக்கவும்.
அதை மயோனைஸ் கலவையுடன் சேர்க்க வேண்டும்.
பின்பு அவற்றை நன்கு மசித்துவிட வேண்டும்.
அடுத்ததாக மசித்து வைத்துள்ள கலவையை உருளைக்கிழங்கில் வைத்து ஸ்டஃப் செய்ய வேண்டும்.
card 5
செய்முறை:
பின்னர் அந்த ஸ்டஃப்பிங் செய்யப்பட்ட உருளைகிழங்கை, பேக்கிங் ட்ரேயில், 200 டிகிரி செல்சியஸில் ப்ரீஹீட் செய்யப்பட்ட ஓவனில் வைத்து 20 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
பின் அந்த ட்ரேயை வெளியே எடுத்து, உருளைக்கிழங்கின் மேல் துருவிய சீஸை தூவி, மீண்டும் ஓவனில் வைத்து 5 நிமிடம் பேக் செய்யவும்.
ஜாக்கெட் பொட்டேட்டோ தயார்.
சுவையான ஜாக்கெட் பொட்டேட்டோ தயார்.