
நடிகை ரம்யாகிருஷ்ணன் ஸ்டைலில் ஆவக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
நேற்று நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது வீட்டில் ஆவக்காய் ஊறுகாய் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
பலருக்கும் அந்த ஊறுகாயை பார்த்ததும் நா ஊறி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
நீங்களும் வீட்டிலேயே சுத்தமான, ருசியான ஆவக்காய் ஊறுகாய் இப்போது செய்யலாம்.
அதற்கான செய்முறை விளக்கம் இதோ:
தேவையான பொருட்கள்
6 மாங்காய் பெரிதாக நறுக்கியது
3 தேக்கரண்டி மிளகாய் பொடி
கல் உப்பு (தேவையான அளவு)
பூண்டு 20
நல்லெண்ணெய் 4 தேக்கரண்டி
செய்முறை: மாங்காயை, உப்பு சேர்த்து வெயிலில் காயவைக்கவும்.
ஓரிருநாட்களுக்கு பின்னர், அதில் மிளகாய் பொடி, தோல் நீக்கிய பூண்டு பற்களை சேர்க்கவும்.
இந்த கலவையில் நல்லெண்ணெய் சேர்த்து கிளரவும்.
சுவையான ஆவக்காய் ஊறுகாய் தயார்!
embed
ஆவக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?#ramyakrishnan #pickle #mangopickle #star #kizhakkunews pic.twitter.com/k0K79RFm9H— Kizhakku News (@KizhakkuNews) May 8, 2024