LOADING...
மாத்திரை தேவையில்லை; நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்; மருத்துவர்கள் அறிவுரை

மாத்திரை தேவையில்லை; நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்; மருத்துவர்கள் அறிவுரை

எழுதியவர் Sekar Chinnappan
Jan 23, 2026
07:27 pm

செய்தி முன்னோட்டம்

நமது உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால்கள் உள்ளன. ஒன்று 'எல்டிஎல்' (LDL) எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால், மற்றொன்று 'ஹெச்டிஎல்' (HDL) எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால். மருத்துவ நிபுணர்களின் கருத்தப்படி, நல்ல கொலஸ்ட்ரால் நமது இரத்த ஓட்டத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும் சுத்தம் செய்பவர் (Cleaner) போலச் செயல்படுகிறது. இது இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. குறிப்பாக, இந்தியர்களுக்கு HDL அளவு 40 க்கும் குறைவாக இருப்பது இதய பாதிப்பிற்கு முக்கிய காரணமாகிறது.

வழிகள்

நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் வழிகள்

மருத்துவர்கள் கூற்றுப்படி, எந்த ஒரு மாத்திரையாலும் நல்ல கொலஸ்ட்ராலை மட்டும் தனியாக அதிகரிக்க முடியாது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களே இதற்கு ஒரே வழி: புகைப்பிடித்தலை நிறுத்துதல்: புகைப்பிடிக்கும் பழக்கம் நல்ல கொலஸ்ட்ரால் அளவைக் கணிசமாகக் குறைக்கிறது. நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தும்போது, உங்கள் உடலில் HDL அளவு படிப்படியாக உயரத் தொடங்கும். சமச்சீர் உணவு: பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை சேர்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாகப் பசுமையான காய்கறிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சி: தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைப்பயிற்சி செய்தாலே நல்ல கொலஸ்ட்ரால் 5 முதல் 10 புள்ளிகள் வரை அதிகரிக்கும் என்று மருத்துவர் கூறுகிறார்.

உணவுகள்

HDL க்கு உகந்த உணவுகள்

ஓட்ஸ், பாதாம், வால்நட்ஸ் போன்ற கொட்டை வகைகள், சியா விதைகள், ஆளி விதைகள், அவகடோ பழம் மற்றும் மீன் உணவுகள் ஆகியவை இதயத்திற்குத் தேவையான நல்ல கொழுப்பை வழங்குகின்றன. சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து (Refined Carbs) மற்றும் பால் பொருட்களைக் குறைத்துக் கொள்வது உடல் கொலஸ்ட்ராலைச் சரியாக நிர்வகிக்க உதவும். தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியர்களின் உணவுப் பழக்கம் மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை காரணமாக கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து நல்ல கொலஸ்ட்ரால் குறைகிறது. வெளியே சாப்பிடும் கலாச்சாரம் மற்றும் நேரமின்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும். இருப்பினும், தொடர்ச்சியான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதயத்தின் பாதுகாப்பு அரணான நல்ல கொலஸ்ட்ராலை நாம் எளிதாக அதிகரிக்க முடியும்.

Advertisement