புரட்டாசி ஸ்பெஷல்: புரட்டாசி தளிகையில் தவறாமல் இடம்பெற வேண்டிய பொருட்கள்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த மாதம் முழுவதும், சனிக்கிழமைகளில், இறைவனை வழிபடுவது வழக்கம். இந்த சனிக்கிழமை படையலின் பெயர் 'புரட்டாசி தளிகை'. தளிகையில் இடம்பெறும் உணவு பொருட்கள் என்பதை இங்கே பார்க்கலாம். முதலில் பூஜை அறையில், இறைவன் படத்திற்கு அருகே, ஒரு பாத்திரத்தில் குடிநீர் நிரப்பி அதில் சிறிது துளி இலைகள் போட்டு வைக்கவும். அவரவர் ஆசைப்படி, வெள்ளித்தட்டிலோ, வாழை இலையிலோ தளிகை வைக்கலாம். அந்த இலையில், தேங்காய், பழம் மற்றும் வெற்றிலை-பாக்கும், அவசியம்
படையலில் இடம்பெறும் உணவுகள்
ஒரு சாரார், இந்த தளிகைக்கு மூன்றோ அல்லது ஐந்து வகை கலந்த சாதத்தை வைப்பார்கள். குறிப்பாக பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு சேர்த்து செய்யப்படும் சர்க்கரை பொங்கல். அதனுடன், மாவிளக்கு, புளியோதரை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம் அல்லது கற்கண்டு சாதம் வைப்பது வழக்கம். ஒரு சிலர், வாழை இலையில், சாதம், பருப்பு, நெய், வடை, பாயசம் போன்றவற்றுடன் ஒரு கூட்டும், பொரியலும் வைத்து வணங்குவர். ஆனால், இந்த புரட்டாசி தளிகை முடியும் வரை விரதம் இருப்பது நல்லது என்பது பெரியவர்கள் கூற்று. உங்கள் புரட்டாசி தளிகையில் இடம்பெறப்போகும் உணவுகள் என்ன?