Loading...
புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக அரைச்சுவிட்ட சாம்பார் செய்வது எப்படி?
வேண்டுமென்றால் கத்தரிக்காய், முருங்கைக்காய் போன்ற காய்களையும் இந்த குழம்பில் சேர்த்து கொள்ளலாம்.

புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக அரைச்சுவிட்ட சாம்பார் செய்வது எப்படி?

எழுதியவர் Sindhuja SM
Sep 14, 2023
08:00 am

செய்தி முன்னோட்டம்

ஒரே மாதிரியாக சாம்பார் செய்து அலுத்துவிட்டதா? உணவு பிரியர்களுக்கு ஏற்ற இந்த பாரம்பரியமான அரைச்சுவிட்ட சாம்பாரை செய்து பாருங்கள். பொதுவாக, ரெடிமேட் சாம்பார் பொடியை வைத்து செய்யப்படும் சாம்பார்களையே நாம் வீடுகளில் அடிக்கடி செய்கிறோம். ஒரு மாற்றத்திற்காக மசாலாவை புதிதாக அரைத்து செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? அதுவே அரைச்சுவிட்ட சாம்பாராகும். சரி இந்த ருசியான சாம்பாரை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

உஹபெக்

மசாலாவுக்கு தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு- 1 தேக்கரண்டி

வெந்தயம்- 1/4 தேக்கரண்டி

சீரகம்- 1/4 தேக்கரண்டி

காய்ந்த சிவப்பு மிளகாய்-4-5

கொத்தமல்லி விதைகள்- 1 தேக்கரண்டி

துருவிய தேங்காய்- 2 தேக்கரண்டி

மசாலா செய்முறை:

வாணலியில், தேங்காயை தவிர பிற மசாலாப் பொருட்களை, நன்றாக பொன்னிறமாகும் வரை குறைந்த தீயில் வதக்கவும். அதன் பிறகு, தேங்காய் துருவலையும் அதனுடன் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

மசாலா பொருட்கள் ஆறியவுடன், அதை மிக்சியில் நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

திஹ்கிவ்ஜ்

சாம்பாருக்கு தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு- 1/3 கப்

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி

கடுகு- 1/4 தேக்கரண்டி

சீரகம்- 1/4 தேக்கரண்டி

வெந்தயம்-சிறிதளவு

கறிவேப்பிலை- சிறிதளவு

பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை

சின்ன வெங்காயம்- 15(தோல் உரித்தது)

தக்காளி- 1 (நறுக்கியது)

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

புளி- நெல்லிக்காய் அளவு(ஊறவைத்து வடிகட்டி கொள்ளவும்)

கொத்தமல்லி தழை- சிறிதளவு(நறுக்கியது)

குறிப்பு: வேண்டுமென்றால் கத்தரிக்காய், முருங்கைக்காய் போன்ற காய்களையும் இந்த குழம்பில் சேர்த்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

டிவ்க்ள்

சாம்பார் செய்முறை: 

துவரம் பருப்பை 2 கப் தண்ணீரில் நன்றாக வேக வைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில், நல்லெண்ணையை சூடாக்கி அதில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.

அது பொரிந்தவுடன், தீயை குறைத்துவிட்டு அதில் பெருங்காயத்தூளை சேர்க்கவும்.

அதன் பிறகு, அதனுடன் சிறிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தற்போது அதோடு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.

அது வதங்கியதும், புளி தண்ணீர் மற்றும் அரைத்து வைத்த சாம்பார் மசாலாவை சேர்க்கவும்.

அதன்பின், கடாயை ஒரு மூடியால் மூடி, 10-15 நிமிடங்கள் குழம்பு கலவையை வேக விடவும்.

கடாயில் இருக்கும் வெங்காயம் வெந்தவுடன், வேகவைத்த பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்.

ADVERTISEMENT

பியூரி

மதிய உணவுக்கும் டிபன்களுக்கும் ஏற்ற 'இடி சாம்பார்'

குழம்பு கொதித்ததும், கொத்தமல்லி இலைகளை சேர்த்து சுடசுட பரிமாறவும்.

இது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ரெசிபி அல்ல.

இந்த பாரம்பரிய சாம்பார் வகையை தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கிறார்கள்.

வட தமிழக பகுதிகளில் இதை அரைச்சுவிட்ட சாம்பார் என்றும், தென் தமிழக பகுதிகளில் இதை இடி சாம்பார் என்றும் அழைக்கிறார்கள்.

அதிலும், 'நெல்லை இடி சாம்பார்' என்பது மிகவும் பிரபலமான வகை அரைச்சுவிட்ட சாம்பாராகும்.

இந்த சாம்பார் மதிய உணவுக்கு மட்டுமல்லாமல், இட்லி, தோசை போன்ற டிபன்களுக்கும் ஏற்றது.

ADVERTISEMENT