
நவராத்திரி ஸ்பெஷல்: கொலுவை ஏன் ஒன்பது படிகளில் வைக்கிறோம்?
செய்தி முன்னோட்டம்
நவராத்திரி என்பது நாடு முழுவதும் துர்க்கை அம்மனுக்காக கொண்டாடப்படும் 9 நாள் சிறப்பு பூஜையாகும்.
நவராத்திரின் போது, தமிழகத்தில் கொலு வைத்து கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், இந்த கொலு பொம்மைகளை ஏன் 9 படிகளில் வைக்கிறோம் தெரியுமா?
அதை தெரிந்துகொள்வதற்கு முன், 9 படிகளில் என்னென்ன பொம்பைகள் வைக்கப்படுகின்றன என்பதை பார்க்கலாம்.
முதல் படி: ஓரறிவு ஜீவன்களான மரம், செடி, கொடி மற்றும் தாவரங்கள் போன்றவற்றின் பொம்மைகள் பொதுவாக முதல் படியில் வைக்கப்படுகின்றன.
இரண்டாவது படி: இரண்டறிவு ஜீவன்களான நத்தை, சங்கு போன்றவற்றின் பொம்மைகள் இரண்டாம் படியில் வைக்கப்படுகின்றன.
மூன்றாவது படி: மூன்றறிவு உயிரினங்களான எறும்பு, கரையான் போன்றவற்றின் பொம்மைகள் மூன்றாம் படியில் வைக்கப்படுகின்றன
பிஜேகோவெ
நான்காவது படி:
நான்கறிவு கொண்ட வண்டு, பட்டாம்பூச்சி போன்ற பூச்சிகளின் பொம்மைகளுக்கான இடம் இது.
ஐந்தாவது படி: ஐந்தறிவு கொண்ட உயிரினங்களான விலங்குகள் மற்றும் பறவைகளின் பொம்மைகள் இந்த படியில் வைக்கப்படுகின்றன.
ஆறாவது படி: ஆறறிவு கொண்ட உயிரினமாக கருதப்படும் மனிதர்களின் பொம்மைகள் ஆறாவது படியில் வைக்கப்பட வேண்டும்.
ஏழாவது படி: புனிதர்கள், சந்நியாசிகள் போன்றவர்களின் உருவ பொம்மைகள் இந்த படியில் வைக்கப்படுகின்றன.
எட்டாவது படி: சந்நியாசிகளை விட மேன்மையவர்களாக போற்றப்படும் தேவர்கள் மற்றும் சிறு தெய்வங்களுக்கான படி இது.
ஒன்பதாவது படி: மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் அவர்களது தேவியர்களுக்கான இடம் இது.
எனவே, பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதன் எப்படி தெய்வமாக வேண்டும் என்பதை விளக்கவே 9 படிகளில் கொலு வைக்கப்படுகின்றன.