Page Loader
இளம் வயதில் ஆயுள் காப்பீடு செய்வதால் என்ன நன்மை? 
ஆயுள் காப்பீடு செய்வதன் நன்மைகள்!

இளம் வயதில் ஆயுள் காப்பீடு செய்வதால் என்ன நன்மை? 

எழுதியவர் Prasanna Venkatesh
Apr 17, 2023
01:29 pm

செய்தி முன்னோட்டம்

இளம் வயதில் நம்முடைய உடல்நலம் மிகவும் நலமாக இருக்கும். எனவே, அந்த வயதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆயுள் காப்பீடுகள் பற்றி யோசிப்பதில்லை. 35 வயதிற்கு மேல் தங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கும் போது தான் ஆயுள் காப்பீடுகள் குறித்தே சிந்திக்கத் தொடங்குகிறோம். ஆனால், இளம் வயதிலேயே ஆயுள் காப்பீடு செய்வதில் நமக்கு நிறைய நிதி சார்ந்த நன்மைகள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்ப்போம். 25 வயதிற்கு மேல் தான் திருமணம், குடும்பம் என்று நாம் சிந்திக்கத் தொடங்குவோம். அந்த நேரத்தில் நாம் நல்ல உடல்நலத்துடன் தானே இருக்கிறோம், நமக்கு எதற்கு ஆயுள் காப்பீடு என்ற கேள்வி எழும். ஆனால், உடல்நலம் என்பது என்றேனும் ஒருநாள் குறையும் விஷயம் தானே.

நிதி மேலாண்மை

ஆயுள் காப்பீட்டு நன்மைகள்: 

இளம் வயதிலேயே ஆயுள் காப்பீடு செய்வதன் மூலம், நீங்கள் செலுத்தும் ப்ரீமியம் தொகை குறைவாகவும். அந்தக் காப்பீட்டின் மூலம் உங்கள் குடும்பத்திற்குக் கிடைக்கும் தொகை அதிகமாகவும் இருக்கும். இளம் வயதிலேயே ஆயுள் காப்பீடு செய்திருந்தால், முதிய வயதில் நமக்கு கடன் தேவைப்படும் போது, அந்த ஆயுள் காப்பீட்டை வைத்து நாம் கடனும் பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறது. வயது மட்டுமல்ல, பணவீக்கமும் நாளுக்கு நாள் நாம் செலுத்தும் தவணைத் தொகையின் அளவை அதிகரிக்கும். அதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இளம் வயதில் ஆயுள் காப்பீடு தேவையற்றது என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால், இளம் வயதில் ஆயுள் காப்பீடு செய்வது நீண்ட கால அளவில் நமக்கு நன்மை அளிக்கக்கூடியது.