LOADING...
அலுவலக ஏசி உங்களை நோய்வாய்ப்படுத்துகிறதா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய காற்று மாசு குறித்த அதிர்ச்சி உண்மைகள்
அலுவலக ஏசியால் ஏற்படும் காற்று மாசு ஆபத்துகள்

அலுவலக ஏசி உங்களை நோய்வாய்ப்படுத்துகிறதா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய காற்று மாசு குறித்த அதிர்ச்சி உண்மைகள்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 02, 2026
07:53 pm

செய்தி முன்னோட்டம்

நாம் வெளியில் உள்ள மாசின் அளவை சரிபார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை, தினமும் 8 மணி நேரம் சுவாசிக்கும் அலுவலக ஏசி காற்றின் மீது காட்டுவதில்லை. நாம் சுவாசிக்கும் ஏசி அறையின் உள்ளகக் காற்று, வெளிப்புற புகையை விட இரண்டு முதல் ஐந்து மடங்கு அதிக மாசு நிறைந்தது என்று அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை எச்சரித்துள்ளது. அலுவலக ஏசி காற்று எவ்வாறு நமது நுரையீரலைப் பதம் பார்க்கிறது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் வழங்கும் விழிப்புணர்வுத் தகவல்களை இதில் பார்ப்போம்.

முக்கிய அறிகுறிகள்

அலுவலக ஏசி காற்றால் ஏற்படும் முக்கிய அறிகுறிகள்

அலுவலக ஏசி அமைப்பில் போதிய புதிய காற்று பரிமாற்றம் இல்லாதது மற்றும் படியும் பூஞ்சைக் காளான்கள் காரணமாகக் காற்று நச்சுத்தன்மையாக மாறுகிறது. இதனால் ஊழியர்களுக்குத் தொடர்ச்சியாகத் தொண்டையைக் கனைப்பது, நாள்பட்ட வறட்டு இருமல், அடிக்கடி ஏற்படும் தலைவலி, மூக்கடைப்பு, சைனஸ் பாதிப்பு அதிகரிப்பு, சோர்வு மற்றும் இரவு நேரங்களில் தூக்கமின்மை போன்ற பல லைஃப்ஸ்டைல் ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. குளிர்ச்சியாக இருக்கும் எல்லா அறைகளும் ஆரோக்கியமானவை அல்ல என்பதை ஊழியர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அலுவலக காற்று

அலுவலக காற்றே காரணம் என்பதைக் கண்டறியும் மாஸ்டர் க்ளூ

உங்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவிற்கு அலுவலக ஏசி தான் காரணமா என்பதை ஒரு எளிய முறையின் மூலம் கண்டறியலாம் என மருத்துவர்கள் விளக்குகின்றனர். அலுவலக வேலை நேரங்களில் மட்டும் உங்களுக்குத் தலைவலி, இருமல் அல்லது சோர்வு அதிகமாகி, மாலை வீட்டிற்கு சென்றவுடனோ அல்லது வார இறுதி விடுமுறை நாட்களிலோ அந்த அறிகுறிகள் தானாகவே மறைந்துவிட்டால், அதற்கு உங்களது அலுவலகத்தின் மோசமான காற்றுத் தரமே காரணம் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

Advertisement

நுரையீரல் பாதிப்பு

நுரையீரலை செயலிழக்கச் செய்யும் வறண்ட ஏசி காற்று

ஏசி அறையின் வறண்ட காற்றை சுவாசிக்கும் போது, கிருமிகளைத் தடுத்து நிறுத்தும் மூக்கின் பாதுகாப்புப் படலம் தற்காலிகமாக செயலிழந்துவிடுகிறது. இதனால் கிருமிகள் எளிதாக நுரையீரலுக்குள் நுழைந்துவிடுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மூச்சுக்குழாய் அழற்சியைத் தூண்டி ஆஸ்துமா, அலர்ஜி உள்ளவர்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. சில நேரங்களில், சரியாகப் பராமரிக்கப்படாத ஏசி சிஸ்டம்களால் 'லெஜியோனெய்ர்ஸ்' என்ற உயிருக்கே ஆபத்தான நிமோனியா காய்ச்சல் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement

நச்சுக்கள்

அடைக்கப்பட்ட அறைகளும் காற்றில் உள்ள நச்சுக்களும்

நவீன அலுவலகங்கள் அனைத்தும் வெளிப்புற காற்று உள்ளே வர முடியாதபடி முழுமையாக மூடப்பட்ட ஏசி கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இத்தகைய சூழலில், ஊழியர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவு காற்றில் அதிகரிக்கும் போது, மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் குறைந்து கடுமையான சோர்வு, தலைவலி மற்றும் வேலை நேரத்தில் தூக்கக் கலக்கம் ஏற்படுகின்றன. இவை தவிர, அலுவலகத்தில் உள்ள பர்னிச்சர்கள் மற்றும் தரை துடைக்கும் கெமிக்கல்களில் இருந்து வெளியாகும் கண்ணுக்குத் தெரியாத நச்சு இரசாயனங்களும் ஊழியர்களின் சுவாசப் பாதையைக் கடுமையாகப் பாதிக்கின்றன.

தற்காப்பு முறைகள்

ஊழியர்களும் நிறுவனங்களும் செய்ய வேண்டிய தற்காப்பு முறைகள்

இந்த ஏசி காற்றுப் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஊழியர்கள் நாள் முழுவதும் தங்களை நன்றாக ஹைட்ரேட்டடாக வைத்திருக்க வேண்டும். ஏசி காற்று நேரடியாக உடலில் படும்படி அமர்வதைத் தவிர்த்து, வேலைக்கு நடுவே சில நிமிடங்கள் வெளிப்புற தூய்மையான காற்று கிடைக்கும் இடங்களுக்குச் சென்று வரலாம். ஆபீஸ் ஏசி வெப்பநிலையை எப்போதும் 24 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஈரப்பதத்தை 40-50 சதவீதத்திற்குள்ளும் பராமரிப்பது நல்லது. நிறுவனங்களும் தங்களின் ஏசி ஃபில்டர்களைத் தகுந்த கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும்.

Advertisement