தேசிய அறிவியல் தினம் 2023: அதன் வரலாறும், முக்கியத்துவமும் பற்றி தெரிந்து கொள்வோம்
ஆண்டுதோறும், பிப்ரவரி 28 அன்று, தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், இந்திய விஞ்ஞானியும், மருத்துவருமான சர்.CV ராமன் கண்டுபிடித்த 'ராமன் எபெக்ட்'-இன் முக்கியத்துவத்தை நினைவுகூரும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், இந்திய முழுவதும், அறிவியலின் முக்கியத்துவத்தையும், அது நம் மனிதர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் நினைவூட்டுவதற்காக அனுசரிக்கப்படுகிறது. இந்த தேசிய அறிவியல் தினம் இந்தியர்கள் மட்டுமின்றி பிற நாடுகளைச் சேர்ந்தவர்களாலும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. 1928 -இல் இந்த நாளில் தான், ராமன் எபெக்ட் கண்டுபிடிக்கப்பட்டது. 'ராமன் எபெக்ட்' என்பது, ஒளியின் அலைநீளத்தில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது.
சி.வி ராமன் பற்றி சிறு குறிப்பு
அதாவது, ஒரு ஒளிக்கற்றை, தூசியாற்ற சாதனத்திற்குள் நுழையும்போது, ஒளிக்கற்றையிலிருந்து, ஒளிசிதறல்கள் நிகழும். அந்த ஒளி சிதறல்கள் அலைநீளம், உள்ளே அனுப்பப்பட்ட அலையின் நீளத்தை விட மாறுபடும். இந்த மாறுதலை தான் CV ராமன் கண்டுபிடித்தார். தமிழ்நாட்டில் 1888-இல் பிறந்த சி.வி.ராமன், இயற்பியல் துறையிலும் பல ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை செய்துள்ளார். 1928 -இல் அவருக்கு இந்தியா அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து 1930-ஆம் ஆண்டு, அவரின் ராமன் எபெக்ட்டிற்காக கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவியல் தினத்தன்று, இந்தியா முழுவதும் பல அறிவியல் சம்மந்தப்பட்ட கருத்தரங்குகள், போட்டிகள் மற்றும் விழாக்கள் நடைபெறும். அறிவியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளுக்கு இந்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும்.