சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்?
இன்று, (பிப்., 24) சர்வதேச 'Standup against Bullying' தினம். Bullying என்றால், மிரட்டல் என்று பொருள்படும். இந்த தினத்தை ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடுகிறார்கள். ஆண்டுதோறும் நவம்பர் மூன்றாவது வெள்ளிக்கிழமை மற்றும் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் அனுசரிக்கப்படுகிறது. மிரட்டல் எனபதற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மற்றவர்களிடம் கருணை, மரியாதை மற்றும் பச்சாதாபத்தை மேம்படுத்துவதற்கும் என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள். Bullying-ஆல் பாதிக்கப்படுபவர்கள் பதட்டம், மனசோர்வு, பயம் போன்ற உணர்வுகளை அதிகரிக்கும். இறுதியாக சிலர் மனதில், தற்கொலை எண்ணத்தையும் தூண்டும். இந்த Bullying பல வகைகளில் உண்டு. உடல்வழி, வாய்மொழிவழி, உணர்ச்சிவழி மற்றும் இணையவழி மிரட்டல். இவ்வகை மிரட்டல்கள், வீடு, அலுவலகம், பொது இடங்கள், பள்ளி, ஆன்லைன் என எங்கு வேண்டுமானாலும் நிகழலாம்.
Bullying -ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெல்ப்லைன்கள்
இந்த சர்வேதேச நாளன்று, இத்தகைய மிரட்டல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, நீங்கள் குரல் கொடுக்கவும், இது போன்ற bullying -இல் ஈடுபடுபவர்களை அடையாளம் காணவும், அதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கலாம். இதெற்க்கென செயல்படும் அமைப்புகளுடன் கைகோர்த்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் இந்த bullying -ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்காக, இந்தியாவில் 8 ஹெல்ப்லைன்கள் உள்ளன. நீங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தாலோ, தனிமையாகவும் பயமாகவும் உணர்ந்தாலோ, உடனே, உங்களுக்கு அருகிலுள்ள ஹெல்ப்லைன் நம்பரை தொடர்பு கொள்ளலாம். இவை அரசாங்கம் சார்பிலும், தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, தற்போது, பள்ளிகளிலும், அலுவலங்களில், இது போன்று நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக புகார் அளிக்கவும், அதை தடுக்கவும் தனியாக ஒரு செல் செயல்படுவது கட்டாயமாக்கப்பட்டள்ளது.