மனநலம்: மனநலத்தை சுற்றி உலவும் நம்பக்கூடாத 5 கட்டுக்கதைகள்
செய்தி முன்னோட்டம்
முற்காலத்தை போல் அல்லாமல், இப்போது மனநலத்தை பற்றி அனைவரும் வெளிப்படையாக பேச தொடங்கிவிட்டனர். மனம் ஆரோக்கியமாக இருக்க பல வழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சூழலில், மனநலனைப் பற்றி உலவும் 5 கட்டுக்கதைகளை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்:
கட்டுக்கதை 1: மனநோய் என்பது பலவீனத்தின் அடையாளம்
மனநோய், பலவீனமானவர்களை தான் பீடிக்கும் என்பது பொய். இது உடல்வலிமைக்கு சம்மந்தம் இல்லாதது. மாறாக, மனநல நிலையை ஏற்றுக்கொள்ளும் வலிமையையும், சிகிச்சை பெறுவதற்கான தைரியத்தையும் குறிக்கிறது.
கட்டுக்கதை 2: மனநலப்பிரச்சினைகள் என்றென்றும் நீடிக்கும்
அனைத்து மனநோய்களும் தீர்க்க முடியாதது அல்ல. பலவற்றை, சரியான அணுகுமுறை மூலம் குணப்படுத்தலாம். உங்கள் மனநோயினைப் பொருத்தும், அதற்குத் தரப்படும் ஆலோசனைகளை பொருத்தும், உங்களுக்கு தீர்வு கிடைக்கும் நேரம் வேறுபடும்.
மன நோய்
மனநோயாளிகள் பைத்தியக்காரர்கள் அல்ல
கட்டுக்கதை 3: 'நேர்மறையாக' இருந்தால் மட்டுமே குணமடைய முடியும்
"Staying positive" என்பது நல்லதுதான். எனினும், ஒரு குறிப்பிட்ட மனநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு, நோயாளி தனது பிரச்சினையின் மூல காரணத்தை எதிர்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொண்டு, மருத்துவ உதவியுடன் அதிலிருந்து மீள வேண்டும்.
கட்டுக்கதை 4: மனநோயாளிகள் அனைவரும் பைத்தியக்காரர்கள்
மனநோய், யாரையும் பைத்தியம் ஆக்குவதில்லை. எண்ணங்களும், மனதின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படுகிறதே தீவிர, அவரை பைத்தியமாக மாற்றாது.
கட்டுக்கதை 5: மனநல மருந்துகள் தீங்கு விளைவிப்பவை: மனநல மருந்துகள் நெடுங்காலம் உட்கொண்டால், உடல்நலம் பாதிக்கும் என்பது பொய். மற்ற உடல் நோய்களுக்கு, மருந்தும், சிகிச்சையும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனநலத்திற்கும், மருந்து முக்கியம். அவை மனநோய்க்கான அறிகுறிகளை குறைத்து, மனநிலையை சீராக்க உதவும்.