தேநீரைப் பற்றி நீங்கள் இவ்வளவு நாளும் நம்பி கொண்டிருந்த கட்டுக்கதைகள் என்னவென்று தெரியுமா?
தேநீர், உலகெங்கிலும் அதிகமாக உட்கொள்ளப்படும் பானங்களில் ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை சுற்றி பல கட்டுக்கதைகள் இன்றும் உலவுகிறது. டீயில், பால் சேர்ப்பதால், அதன் ஆரோக்கிய நன்மைகளை சமன்செய்யப்படுகிறது என்று சிலர் நம்புகிறார்கள். சிலரோ, கிரீன் டீ எடையைக் குறைக்க உதவும் என்று நினைக்கிறார்கள். இவை அனைத்துமே மூட நம்பிக்கைகள் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி இன்றும் நம்பப்படும் சில கதைகள் இதோ: கட்டுக்கதை 1: தேயிலை இலைகளுக்கு சீக்கிரம் காலாவதி ஆகிவிடும். ஒவ்வொரு உற்பத்திப் பொருளும் காலாவதி தேதியுடன் வருகிறது. வழக்கமாக, தேநீர் 6-8 மாதங்கள் வரை நீடிக்கும். ஒரு ஆய்வின்படி, தேயிலை காலாவதியான பிறகு, அதன் கேட்டசின் அளவு 32% குறைகிறது. இருப்பினும், அது உபயோகத்தன்மையுடனே இருந்தது எனத்தெரிய வந்துள்ளது.
க்ரீன் டீ குடிப்பதால் எடை குறையாது
கட்டுக்கதை 2: கிரீன் டீ குடிப்பதால் உடல் எடையை குறைக்கலாம். தேநீர் பற்றிய பிரபலமான கட்டுக்கதை இதுதான். இது, பல்வேறு பிராண்டுகளால் பின்பற்றப்படும், ஒரு வியாபார யுக்தி. க்ரீன் டீ குடிப்பதால், சிறிய அளவில் உங்கள் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துமீ தவிர, எடை இழக்க உதவாது. கட்டுக்கதை 3: டீ பேக், டீ தூளை போன்றே ஆரோகியமானது. டீ பேக்குகளில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், எண்ணெய்கள் மற்றும் நறுமணம் போன்றவை நீக்கப்பட்டு, தேயிலை இலைகளிலிருந்து வரும் தூசி மற்றும் ஃபேன்னிங்ஸ் மட்டுமே உள்ளன. கட்டுக்கதை 4: தேநீரில் பால் சேர்ப்பது அதன் நன்மைகளை சமன்செய்கிறது. பாலில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் பி2, பி12 நிறைந்துள்ளது, இது தேநீரின் அசல் பலன்களுக்கு மேலும் வலுசேர்க்கிறது.