டீ பிரியர்களே, வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாதாம்! மருத்துவர்கள் அறிவுரை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில், டீ ஒரு பானம் மட்டுமல்ல, பலருக்கு அது ஒரு உணர்வு! இந்தியர்கள் பலரின் வாழ்வில், காலை எழுந்ததும், டீ குடிப்பது, தினசரி வாழ்க்கையின், இன்றியமையாத பகுதியாகவே மாறிவிட்டது எனலாம்.
ஆனால், இந்த அற்புத பானத்தை, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது, பல நேரங்களில் உங்களுக்கு தெரியாமலேயே, எதிர்வினைகளை ஏற்படுத்துமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் எச்சரிக்கும், நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில பக்கவிளைவுகள் இதோ:
ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது: காலையில் டீ குடிப்பதனால், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை, உங்கள் உடல் உறிஞ்சுவதில், சிக்கல் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு காரணம், டீயில் உள்ள கேட்ச்சின்கள் எனப்படும் சேர்மங்கள்.
தேநீர்
அதிகமாக டீ குடிப்பதனால், பற்கள் கறையாகலாம்
செரிமான கோளாறு: வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதால் உங்கள் செரிமான அமைப்பில் வாயு உருவாகலாம். தேயிலையில் டேனின்கள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இது செரிமான அமைப்பை எரிச்சலடையச் செய்யும். அதிக அளவு டீ பருகும் சிலருக்கு, அதனால் வாயு மற்றும் வீக்கம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
நீரிழப்புக்கு வழிவகுக்கும்: தேநீரில் உள்ள, டையூரிடிக், சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. அப்போது, உங்களை நீரேற்றத்துடன்(Hydrated) வைக்காவிட்டால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கும். இருப்பினும், காபி அல்லது ஆல்கஹால் போன்ற பிற பானங்களுடன் ஒப்பிடும்போது தேநீரின் டையூரிடிக் விளைவு குறைவானது.
கறைபடிந்த பற்கள்: தேநீரில் உள்ள டானின்கள், காலப்போக்கில் பற்களின் நிறமாற்றத்திற்கு வழிவகுக்கும். பற்கள் கறைபடும் அபாயத்தைக் குறைக்க, மிதமான அளவில் தேநீர் அருந்தவும். அடிக்கடி, உங்கள் வாயை கொப்பளிக்கவும்.