NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / புரட்டாசி ஸ்பெஷல்: சுவைமிக்க காளான் பிரியாணி செய்முறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    புரட்டாசி ஸ்பெஷல்: சுவைமிக்க காளான் பிரியாணி செய்முறை
    pc: https://www.yummytummyaarthi.com/ சுவைமிக்க காளான் பிரியாணி செய்முறை

    புரட்டாசி ஸ்பெஷல்: சுவைமிக்க காளான் பிரியாணி செய்முறை

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 01, 2023
    11:42 am

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுகிழமை என்றாலே அநேக வீடுகளில் மதிய உணவு, பிரியாணி தான்!

    ரிலாக்ஸ்ட்டான சண்டேவில், ஈஸியாக செய்யக்கூடிய காளான் பிரியாணி செய்வது எப்படி என இன்று பார்க்கப்போகிறோம். புரத சத்து நிறைந்த காளான், சிக்கனுக்கு சிறந்த மாற்றாகும்.

    குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கட்டாயம் சாப்பிட வேண்டிய பொருளாக காளான் மாறியுள்ளது.

    இந்த புரட்டாசி மாதத்தில், அசைவம் சாப்பிட முடியாதவர்களும் இந்த காளான் பிரியாணியை செய்து பாருங்கள். அசைவ பிரியாணி போலவே இருக்கும். சரியான அளவில் மசாலாவை சேர்த்து செய்யும் போது, யாருக்குமே இது சைவ பிரியாணி என்றே கண்டுபிடிக்க முடியாது.

    பிரியாணி செய்ய பாசுமதி அரிசியை விட சீராக சம்பா அரிசியை பயன்படுத்தினால், சுவை அள்ளும்!

    card 2

    தேவையான பொருட்கள்

    2 டீஸ்பூன் நெய்

    1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்

    1 இலவங்கப்பட்டை

    3 ஏலக்காய்

    1 கருப்பு கல்பாசி

    2 கிராம்பு

    1 பிரிஞ்சி இலை

    1 பெரிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டியது

    1 டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது

    2 கீறிய பச்சை மிளகாய்

    1 பெரிய தக்காளி பொடியாக வெட்டயது

    200 கிராம் காளான்கள்

    2 தேக்கரண்டி மிளகாய் தூள்

    1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

    1 டீஸ்பூன் சீரக தூள்

    1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்

    2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்

    3 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள்

    3 டீஸ்பூன் புதினா இலைகள்

    1 கப் சீரக சம்பா அரிசி

    தேவைக்கேற்ப உப்பு

    1¼ கப் தண்ணீர்/ தேங்காய் பால்

    card 3

    செய்முறை

    சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 -30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    பிரஷர் குக்கரில் நெய்யை சூடாக்கவும். தரப்பட்டுள்ள அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து, அவற்றை குறைந்த தணலில் வதக்கவும்.

    லேசாக வதங்கியதும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    இப்போது நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பின்னர், தக்காளி மற்றும் காளான்களை சேர்க்கவும்.

    நன்றாக கலந்து, மேலும் 10 நிமிடங்கள் வதக்கவும்.

    பின்னர் அதனுடன், மசாலாப் பொடிகளைச் சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வதக்கவும்.

    card 4

    செய்முறை

    பின்னர் இந்த மசாலா கலவையுடன், சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவவும். நன்றாக கலக்கவும்.

    கழுவி ஊற வைத்த சீரக சம்பா அரிசியை போட்டு, அரைத்த மசாலாவுடன் நன்றாக சேரும் வகையில் வதக்கவும்.

    கவனிக்க: இவை அனைத்துமே குறைத்த அல்லது மிதமான தீயில் செய்ய வேண்டும்.

    பின்னர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    எல்லாவற்றையும் ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள்.

    பின்னர் குக்கரை மூடி வைத்து, குறைந்த தணலில் 1 விசில் விடவும். அல்லது 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.

    பின்னர், அடுப்பை அனைத்து, ஸ்டீம் தானாக போகும் மட்டும் காத்திருக்கவும்.

    பின்னர், குக்கரை திறந்து, லேசாக கிளறி, ரைதாவுடன் சூடாக பரிமாறவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புரட்டாசி
    உணவு குறிப்புகள்
    உணவுக் குறிப்புகள்
    உணவு பிரியர்கள்

    சமீபத்திய

    ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு ராஜ்நாத் சிங்
    '2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம் பாகிஸ்தான்
    மே 13க்குள் வீரர்கள் முகாமுக்கு திரும்ப வேண்டும்; ஐபிஎல்லை விரைவில் தொடங்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரம் ஐபிஎல் 2025
    லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி பாதுகாப்பு துறை

    புரட்டாசி

    புரட்டாசி ஸ்பெஷல்: புரட்டாசி மாதத்தை 'Glance' உடன் கொண்டாடுங்கள்  உணவு குறிப்புகள்
    புரட்டாசி மாதத்தில், அசைவத்தை எதற்காக தவிர்க்க வேண்டும்? அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  அறிவியல்
    புரட்டாசி ஸ்பெஷல்: புரட்டாசி தளிகையில் தவறாமல் இடம்பெற வேண்டிய பொருட்கள் வாழ்க்கை
    புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'எம்டி சால்னா' செய்வது எப்படி? உணவு குறிப்புகள்

    உணவு குறிப்புகள்

    உலக பிரியாணி தினம்: இந்தியாவின் பிரபலமான பிரியாணி வகைகள்  உலகம்
    உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குழந்தை பராமரிப்பு
    ஃபூட் டெலிவரி ஆப்களை எப்போதும் சார்ந்து இருப்பது தோன்றுகிறதா? உங்களுக்கு உதவ சில டிப்ஸ் உணவு பிரியர்கள்
    நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கான அத்தியாவசிய குறிப்புகள் உடற்பயிற்சி

    உணவுக் குறிப்புகள்

    பார்ச்சூன் குக்கீகள் பின்னணியும், அதன் செய்முறையும் உணவு குறிப்புகள்
    ஃபேன்டா, கோக், பெப்சி, ஐஸ் டீ, சூயிங் கம் - அஸ்பார்டேம் உணவு சோதனையில் சிக்கிய உங்கள் ஃபேவரைட் உணவுகள் புற்றுநோய்
    "இப்படியெல்லாமா?" என வியக்கவைத்த சாதனைகள் சில தேசிய ஊட்டச்சத்து வாரம்
    புரட்டாசி மாதம் ஸ்பெஷல் - சுவைமிக்க புரட்டாசி பிரியாணி செய்வது எப்படி ? புரட்டாசி

    உணவு பிரியர்கள்

    உலகளவில், அதிக சைவ பிரியர்கள் இருக்கும் நாடாக இந்தியா முன்னிலை; கடைசி இடத்தில் ரஷ்யா உலகம்
    சர்ச்சையில் சிக்கிய சென்னையின் புகழ்பெற்ற பாகுபலி தாலி மீல்ஸ்! சென்னை
    ஓணம் சத்யா: 26 உணவுப் பொருட்களின் முக்கியத்துவம் என்ன? உணவு குறிப்புகள்
    'தாய் கறி' போலவே உலக அளவில் பிரபலமாக இருக்கும் குழம்பு வகைகள் தேசிய ஊட்டச்சத்து வாரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025