பருவகாலங்களில் உங்க பட்டு பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளும், அவற்றை பராமரிக்க சில குறிப்புகளும்
மழைக்காலம் ரம்மியமாகத்தான் இருக்கும், நீங்கள் அழுக்கு குட்டைகளிலும், சேற்றிலும் நினையாத வரை. இந்த பருவ காலத்தில், அதிக ஈரம், உங்கள் பாதங்களில், துர்நாற்றம், வெடிப்பு, அரிப்பு மற்றும் பூஞ்சை போன்ற கால் தொடர்பான பல சுகாதார நிலைமைகளை ஏற்படுத்தலாம். மழை நாட்களில் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய சில பொதுவான கால் பிரச்சினைகளும், அவற்றிற்கான தீர்வுகளும் இங்கே உள்ளன. துர்நாற்றம் வீசும் பாதங்கள்: உங்கள் காலணிகளின் வழியாக அழுக்கு நீர் நுழைவதால், உங்கள் பாதங்களில் துர்நாற்றம் வீசக்கூடும். அதைத் தவிர்க்க, ஆப்பிள் சைடர் வினிகரில் கால்களை கழுவலாம். ஏனெனில் அது துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியா/பூஞ்சைகளைக் கொல்லும்.
பாத பராமரிப்பு குறிப்புகள்
பாத அரிப்பு: ஈரப்பதமான காலநிலை, அழுக்கு நீரில் நனைவது போன்ற காரணங்களால், மழைக்காலத்தில் உங்கள் கால்களில் தொடர்ந்து அரிப்பு ஏற்படலாம். இதிலிருந்து நிவாரணம் பெற, சிறந்த இயற்கை மற்றும் வீட்டு வைத்தியங்களில் ஒன்று, பாதிக்கப்பட்ட இடத்தில், ஓட்ஸ் பேஸ்ட் தடவலாம். பாத வெடிப்புகள்: அதிக ஈரப்பதம் மற்றும் அழுக்கான தண்ணீர், உங்கள் பாதத்தின் சருமத்தை சேதப்படுத்தும். அதனால், குதிகால் வெடிப்பு மற்றும் வறட்சி உண்டாகும். இதை சரிசெய்ய, நீங்கள் செய்ய வேண்டியது, வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு தேன் சேர்த்து, கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் மசாஜ் செய்யவும். Athlete's foot: மழைக்காலத்தில் பொதுவாக ஏற்படும் புஞ்சை தொற்று இது. இதற்காக பாதிக்கப்பட்ட பகுதியில் தேயிலை மர எண்ணெயை மசாஜ் செய்யலாம்.