LOADING...
என்னாச்சு மில்கி மிஸ்ட் பன்னீருக்கு? காலாவதி தேதிக்கு முன்பே உப்பிப்போன பாக்கெட்; ஹைதராபாத் மருத்துவர் பகிர்ந்த பகீர் தகவல்
எக்ஸ்பைரி டேட் முடிவதற்கு முன்பே உப்பிக் காணப்பட்ட மில்கி மிஸ்ட் பன்னீர் பாக்கெட்

என்னாச்சு மில்கி மிஸ்ட் பன்னீருக்கு? காலாவதி தேதிக்கு முன்பே உப்பிப்போன பாக்கெட்; ஹைதராபாத் மருத்துவர் பகிர்ந்த பகீர் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 09, 2026
05:13 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல பால் உற்பத்தி நிறுவனமான மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் பன்னீர் பாக்கெட், காலாவதி தேதி முடிவதற்கு முன்பே உப்பி வீணாகிப் போனது குறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த மருத்துவர், ரத்னதீப் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய இரண்டு வெவ்வேறு மில்கி மிஸ்ட் பன்னீர் பாக்கெட்டுகள், 10 முதல் 14 நாட்கள் காலாவதி தேதி மீதமிருந்த நிலையிலேயே உப்பிப்போனதாகத் தெரிவித்துள்ளார். சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய 15 நிமிடங்களிலேயே குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டதாகவும், அதே நேரத்தில் வாங்கிய சீஸ் மற்றும் டோஃபு நன்றாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரணம்

பன்னீர் பாக்கெட் உப்ப காரணம் என்ன?

பாக்கெட் செய்யப்பட்ட பால் பொருட்கள் காலாவதி தேதிக்கு முன்பே உப்பிக் காணப்படுவதற்குப் பின்வரும் காரணங்கள் இருக்கலாம். தவறான வெப்பநிலை: தொழிற்சாலையில் இருந்து கடைக்கு வரும் வரை அல்லது கடையில் சரியான குளிர் நிலையில் வைக்கப்படாவிட்டால் நுண்ணுயிரிகள் வளரத் தொடங்கும். பாக்டீரியா வளர்ச்சி: பன்னீரில் உள்ள லாக்டோஸை பாக்டீரியாக்கள் சிதைக்கும்போது வெளியாகும் வாயுக்கள் பாக்கெட்டை உப்பச் செய்கின்றன. பேக்கேஜிங் குறைபாடு: பாக்கெட்டின் சீல் சரியாக இல்லை என்றால், காற்று உள்ளே புகுந்து மிக விரைவாகப் பொருளை வீணாக்கிவிடும்.

கருத்து

நெட்டிசன்கள் கருத்து

மருத்துவரின் இந்தப் பதிவிற்குப் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். "பாக்கெட் செய்யப்பட்ட பன்னீரை விட, வீட்டிலேயே தயாரிக்கப்படும் பன்னீரே சிறந்தது" என்றும், "இதுபோன்ற வீணான பன்னீரைச் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்" என்றும் பலர் எச்சரிக்கின்றனர். சில கடை உரிமையாளர்கள், மில்கி மிஸ்ட் நிறுவனத்திடம் இது குறித்த புகார்களை ஏற்கனவே அளித்துள்ளதாகவும் கமெண்ட்களில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement