மெனோபாஸ் அறிகுறிகளில் இருந்து தப்பிக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள்!
செய்தி முன்னோட்டம்
மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் நிறுத்தத்தை குறிக்கும். இது பொதுவாக 45 முதல் 55 வயது வரை நடைபெறுகிறது.
மெனோபாஸ், ஹார்மோன்களில் மாற்றங்களைக் கொண்டு வந்து பெண்களுக்கு இரவில் வியர்த்தல், யோனி வறட்சி, எடை அதிகரிப்பு, தூக்கக் கலக்கம் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகளை தருகிறது.
இதற்கு உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் இங்கே உள்ளன.
தயிர் மற்றும் பால் பொருட்கள்: மெனோபாஸ் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை பாதிக்கலாம். இது எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கலாம்.இதற்கு பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள் நிவாரணம் தருகின்றன.
Menopause
மெனோபாஸ் டயட்
பருப்புகள்: அக்ரூட், பிஸ்தா போன்ற பருப்புகளில் புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. பருப்புகளில் கொழுப்பு இருந்தாலும், கையளவு சாப்பிடுவது பசி உணர்வை தடுக்கும்.
பீன்ஸ்: பீன்ஸ் & கொண்டைக்கடலை போன்ற பருப்புகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
மீன்: குறிப்பாக சால்மன் மற்றும் டுனா போன்ற கொழுப்பு வகைகள், ஒமேகா-3 கொழுப்புகள், உயர்தர புரதம், வைட்டமின்கள் & தாதுக்களால் நிரம்பியுள்ளன. வழக்கமான மீன் நுகர்வு மனச்சோர்வைக் குறைக்க உதவும்.
சோயா பொருட்கள்: டோஃபு, எடமேம் & சோயாமில்க் போன்ற சோயா பொருட்கள் உயர்தர தாவர அடிப்படையிலான புரதத்தை வழங்கும் சோயாபீன்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.