மெனோபாஸ் என்பது என்ன ? அதன் அறிகுறிகள் யாவை?
மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் நிறுத்தத்தை குறிக்கிறது. மாதவிடாய் பொதுவாக 40 களின் பிற்பகுதியில் இருந்து 50 களின் முற்பகுதியில் நிற்கிறது. மெனோபாஸ்சின் ஆரம்ப நிலையான, ப்ரீ-மெனோபாஸ்சின் அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சீரற்ற மாதவிடாய் சுழற்சிகள்: முதல் அறிகுறி, சீரற்ற/ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் ஆகும். குறிகிய நாட்கள் அல்லது நீண்ட நாட்கள் ரத்த போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் வெப்பநிலை & இரவு வியர்வை: உடல் முழுவதும் திடீரென வெப்பம் பரவும். இதனால் பெரும்பாலும் வியர்வை மற்றும் உடல் சிவந்துபோதல் ஆகியவை ஏற்படலாம். பிறப்புறுப்பு வறட்சி: ஹார்மோன் அளவுகள் ஏற்ற இறக்கம்,யோனி திசுக்களின் மெலிவு, ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைவது, உடலுறவின் போது யோனி வறட்சி & அசௌகரியம் ஏற்படும்.
அறிகுறிகள்
மனநிலை மாற்றங்கள் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள்: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், உடல்நலனை பாதிக்கலாம். இது மனநிலை மாற்றங்கள், எரிச்சல், பதட்டம் அல்லது மனச்சோர்வை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. பாலியல் ஆசையில் மாற்றங்கள்: ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், பாலியல் ஆசை மற்றும் லிபிடோவை பாதிக்கும். சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஆர்வம் குறைவது அல்லது பாலியல் விருப்பங்களில் மாற்றம் ஏற்படலாம். முடி மற்றும் தோலில் ஏற்படும் மாற்றங்கள்: மெனோபாஸ் முடியின் அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரலாம், அதாவது மெலிதல், வறட்சி அல்லது உடையக்கூடிய தன்மை போன்றவை. தோல் மேலும் வறண்டு போகலாம், கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றம் தென்படலாம்.