மருத்துவ குணங்கள் நிரம்பிய சந்தனத்தை உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படும் நறுமண பொருள் இந்த சந்தனம். இது உடலுக்கு பல நன்மைகளை தருமென ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றின் பட்டியல் இங்கே: சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: சந்தனத்தை தொடர்ந்து உபயோகிப்பதால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். வீக்கம், முகப்பரு, வடுக்கள் போன்றவற்றை களைவதற்கு உதவுகிறது. கெமிக்கல்களால் உண்டாகும் சரும எரிச்சலுக்கு சந்தனத்தை உபயோகிக்கலாம். பதட்டத்தை குறைக்க உதவுகிறது: மார்பக பயாப்ஸிக்கு உட்படுத்தப்பட்ட 87 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சந்தனம், லாவெண்டர் மற்றும் ஆரஞ்சு எண்ணையின் நறுமணங்கள், அவர்களின் கவலையைக் கட்டுப்படுத்துகிறது. மற்றொரு ஆய்வில், சந்தன எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய்களின் வாசத்தை நுகரும்போது, அமைதியின்மையும், மன அழுத்தமும் குறைகிறது என்றும், உயர் ரத்த அழுத்தம் சீராகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடம்பை ரிலாக்ஸ் செய்ய சந்தன எண்ணெய் மசாஜ்
சிறுநீர் பாதை வீக்கத்தைத் தணிக்கிறது: வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீரில், சிறிது சந்தன துகள்களை சேர்த்து பருகிவரின், சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றுகளும், அழற்சி வீக்கங்களும் குறைகிறது. உடலில் உள்ள நச்சுகள், சிறுநீர் வழியே வெளியேற்ற, இந்த சந்தனம் உதவுகிறது. தசைகளை தளர்த்தும் சந்தனம்: சந்தனத்தில், ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் நிரம்பியுள்ளதால், தசைகளை தளர்த்தி, உங்களை ரிலாக்ஸ் செய்யவைக்கும். தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில், சந்தன எண்ணெயை மசாஜ் செய்வதால், உங்கள் நரம்பு நார்களும், தசை நார்களும், இரத்த நாளங்களும் தளர்வடைகிறது. வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு சிகிச்சை: ஆண்டிபிலாஜிஸ்டிக் பண்புகள் உள்ளதால், வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றுகளால் ஏற்படும் அறிகுறிகளும், அழற்சிகளுக்கும் நிவாரணம் தருகிறது, சந்தனம்.