இப்போது வீட்டிலேயே எளிதாக செய்யலாம் குழந்தைகள் விரும்பும் பாஸ்தா
செய்தி முன்னோட்டம்
பாஸ்தாவை நாமே தொடக்கம் முதல் செய்வது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். இதன் மூலம் இத்தாலி நாட்டு சமையலின் அடிப்படையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சில பொருட்களை மட்டும் கொண்டு, சில வழிகளை பின்பற்றி, கடையில் வாங்கும் ரெடிமேட் பாஸ்தாவை விட, சுவையாக நீங்களே பாஸ்தா செய்யலாம். வீட்லயே சூப்பரான பாஸ்தா எப்படி செய்வது என இந்தக் கட்டுரை சொல்லும். தேவையான பொருட்கள் தொடங்கி எப்படி செய்வது எனவும் இந்த கட்டுரையில் பார்க்கலாம். நீங்கள் புதிதாக சமையல் கற்றுக்கொள்பவராக இருந்தாலும், பிரதமான சமையல் கலை நிபுணராகவே இருந்தாலும், இந்த குறிப்புகளின் மூலம் எளிதாக பாஸ்தா செய்ய நாங்கள் உதவுகிறோம்.
பொருட்கள்
சரியான பொருட்களை தேர்ந்தெடுப்பது
நல்ல பாஸ்தா செய்ய, தரமான பொருட்கள் முக்கியம். உங்களுக்கு மாவு, உப்பு, தண்ணீர் மட்டுமே போதும். ஜீரோ ஜீரோ ('00') என்ற வகை மாவை பயன்படுத்துங்கள். அது மிகவும் மிருதுவாக இருக்கும். அதில் புரோட்டின் சத்து அதிகம். இதுதான் பாஸ்தாவை கடிக்கும்போது ஒரு மென்மையை தரும். தண்ணீர், மாவுக்கு தேவையான ஈரத்தை கொடுக்கும். மாவுக்கு ஏற்ற அளவிற்கு உப்பு சேர்க்கவும், அது நல்ல சுவையை கூட்டும். இது தவிர வேறு எந்த பொருளையும் எக்ஸ்ட்ரா சேர்க்க கூடாது. சேர்த்தால், மாவின் தன்மை மாறிடும்.
மாவு தயாரிப்பு
மாவு பதம் சரியாக செய்வது எப்படி?
நல்ல பாஸ்தா செய்ய, மாவு சரியான பதத்தில் இருக்க வேண்டும். முதல்ல, ஒரு சுத்தமான இடத்துல மாவை குவிச்சு, நடுவுல குழி போட்டு, அதுல உப்பைப் போடுங்க. முதலில், ஒரு சுத்தமான இடத்தில் மாவை குவித்து, நடுவில் உப்பை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, பரோட்டா மாவு பதத்திற்கு பிசையவும்.பத்து நிமிடங்கள் மாவை பிசையவும். அப்படி பிசையும்போது, அது மிருதுவாகவும், நீளக்கூடியதாவும் மாறும். இது பாஸ்தாவுக்கு ஒரு நல்ல வடிவத்தைக் கொடுக்கும்.
தேய்க்கும் முறை
பாஸ்தா மாவை தேய்ப்பது
மாவு தயாரானதும், அதை தேய்க்க வேண்டிய நேரம் வந்துடுச்சு. மாவை சின்ன சின்ன பகுதிகளாக பிரித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பகுதியையும், உருட்டுக்கட்டை அல்லது பாஸ்தா மெஷின் வைத்து மெல்லிசான தாளாக (ஒரு மில்லிமீட்டர் அளவு கனம்) தேய்க்கவும். மாவு ஒட்டாமல் இருக்க, கொஞ்சமாக மாவை தூவி தேய்க்கவும். கவனம், அதிகமாக தூவக்கூடாது. அப்படி செய்தால், சமைக்கும்போது பாஸ்தா பிசுபிசுவென ஆகிவிடும்.
வடிவம் கொடுக்கும் முறைகள்
சரியாக வெட்டி வடிவம் கொடுப்பது
மாவு தேய்த்ததும், கத்தி அல்லது ரவியோலி அச்சு, டாலியாடெல் கட்டர் மாதிரியான பொருட்களை பயன்படுத்தி, உங்களுக்கு பிடித்த வடிவங்களில் அவற்றை வெட்டிக்கொள்ளவும். ஃபெட்டுசினி மாதிரியான நீளமான துண்டுகளுக்கு, மாவு தாளை மெதுவாக மடித்து, கூர்மையான கத்தி, கட்டரை பயன்படுத்தி, பக்கவாட்டில் வெட்டி தயாரிக்கலாம்.