
இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: குஜராத் பதிப்பு
செய்தி முன்னோட்டம்
உணவுப் பிரியர்களின் புகலிடமாகக் கருதப்படும் குஜராத்தின் அகமதாபாத்தில் கிடைக்கும் தெரு உணவுகளின் பட்டியலை காணலாம்.
பாஃப்டா - ஜிலேபி: அகமதாபாத்தில் கிடைக்கும் மிக சுவையான இனிப்பு என்றால் அது பாஃப்டா-ஜிலேபி தான்! இந்த அற்புதமான சிற்றுண்டி அகமதாபாத்தின் சிறந்த தெரு உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடலை மாவால் தயாரிக்கப்படும் இந்த பாஃப்டாக்கள், எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்டு பாகில் ஊறவைக்கப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள அனைத்து தெரு கடைகளிலும் இந்த தித்திக்கும் பாஃப்டாக்கள் கிடைக்கும்.
காந்த்வி: சுவையான, லேசான மற்றும் அதிக புரத சத்து கொண்ட இந்த சிற்றுண்டி, குஜராத் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. கடலை மாவு, தயிர், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படும் காந்த்வி, குறைந்த கலோரி கொண்ட ஒரு சிற்றுண்டியாகும்.
Gujarathi Street foods
அகமதாபாத்தில் கிடைக்கும் தெரு உணவுகள்
சேவ் காமானி: சேவ் காமானி அல்லது அமிரி காமன் என்று உள்ளூர் வாசிகளால் அழைக்கப்படும் இந்த சிற்றுண்டி, பூண்டு, பாசிப்பருப்பு, எள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மாதுளை, கொத்தமல்லி இலைகள், தேங்காய் துருவல் மற்றும் ஓமப்பொடி ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. காரம், இனிப்பு மற்றும் புளிப்பு ஆகிய சுவைகள் இதில் தூக்கலாக இருக்கும் என்பது இதன் தனிச்சிறப்பு.
டபேலி குச்சி: டபேலி என்று பிரபலமாக அறியப்படும் இந்த அகமதாபாத் தெரு உணவு, அனைவரும் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய ஒரு சிற்றுண்டியாகும். மிக்ஸர், உருளைக்கிழங்கு, பச்சை சட்னி, புளி சட்னி, மாதுளை மற்றும் மசாலா வேர்க்கடலை ஆகியவற்றை வெண்ணெயில் வாட்டப்பட்ட பாவ் பன்னுக்கு நடுவில் வைத்து இந்த உணவு பரிமாறப்படுகிறது.