LOADING...
லிப்ஸ்டிக், லிப் ஸ்க்ரப், லிப் பாம், லிப் ஆயில்: வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்
நம் உதடுகளை ஹைட்ரேட் செய்வதற்கு, லிப் பாம்கள், லிப் ஸ்க்ரப்ஸ், லிப் பட்டர், லிப்ஸ்டிக் மற்றும் லிப் ஆயில்கள் உட்பட பல தேர்வுகள் உள்ளன.

லிப்ஸ்டிக், லிப் ஸ்க்ரப், லிப் பாம், லிப் ஆயில்: வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 21, 2023
05:28 pm

செய்தி முன்னோட்டம்

உங்கள் முக சருமத்தை போலவே, உங்கள் உதடுகளுக்கும் தனிப்பட்ட கவனம் தேவை. இன்று நம் உதடுகளை ஹைட்ரேட் செய்வதற்கு, லிப் பாம்கள், லிப் ஸ்க்ரப்ஸ், லிப் பட்டர், லிப்ஸ்டிக் மற்றும் லிப் ஆயில்கள் உட்பட பல தேர்வுகள் உள்ளன. இந்த உதடு பராமரிப்புப் பொருட்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதோ விரிவான பதில்: லிப் பாம்: உதடுகளை ஈரப்படுத்தவும், வெடிப்பு மற்றும் உலர்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கவும், லிப் பாம் பயன்படும். இயற்கை எண்ணெய்கள், மெழுகுகள் மற்றும் பிற கூறுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இது, உதடுகளின் மேற்பரப்பில் ஒரு பாதுகாப்புத் அரணாக அமைகிறது. லிப் பாமின் முக்கிய நன்மைகள், அதன் நீரேற்றம் மற்றும் ஈரப்பதமூட்டும் குணங்கள் ஆகும்.

card 2

லிப் ஆயில், லிப் ஸ்க்ரப், லிப் பட்டர் மற்றும் லிப் ஸ்டிக்

லிப் ஆயில்: க்ரீஸ் இல்லாமல், தங்கள் உதடுகளில் மங்கலான பளபளப்பை விரும்பும் நபர்களுக்கு லிப் ஆயில் ஒரு சிறந்த வழி. லிப் பாம் போலல்லாமல், உதடு எண்ணெய்கள் சருமத்தின் ஆழம் வரை சென்று, வறட்சி மற்றும் உதடு வெடிப்பைக் குறைக்கும். லிப் ஸ்க்ரப்: லிப் ஸ்க்ரப் என்பது ஒரு எக்ஸ்ஃபோலியேட்டிங் தயாரிப்பு ஆகும். குறிப்பாக உங்கள் உதடுகளில் குவிந்துள்ள இறந்த சரும செல்களை அகற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. லிப் பட்டர்: உதடுகளை ஈரப்பதமாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் லிப் பட்டர், ஷியா பட்டர், அவகேடோ பட்டர், மாம்பழ பட்டர் மற்றும் பிற ஈரப்பதமூட்டும் பொருட்களைக் கொண்டிருப்பதால், கிரீமியர் அமைப்பைக் கொண்டுள்ளது. லிப் ஸ்டிக்: உங்கள் தோற்றத்தை உடனடியாக மெருகூட்டக்கூடிய மிகவும் பிரபலமான ஒப்பனைப் பொருட்களில் ஒன்றாகும் .