வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இருந்தாலும் கூட வாக்களிக்கலாம்!
நாளை தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நடைபெறவுள்ளது. நாளை, ஏப்ரல் 19, தொடங்கும் இந்த தேர்தல் வாக்கு பதிவு, 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளில் CCTV பொருத்தப்பட்டுள்ளது. பதட்டமான வாக்கு சாவடிகள் என கண்டறியப்பட்ட இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையினருக்காக இன்று மாலை வரை தபால் வாக்குபதிவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளும் அனேகமாக முடிவடைந்து விட்டதாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
வாக்களிக்க செல்லுபடியாகும் ஆவணங்கள்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வேறு எந்தெந்த ஆவணங்களைக்கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டையை இல்லாத பட்சத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு சில புகைப்பட அடையாள ஆவணங்களில் ஒன்றை காண்பிக்க வேண்டும். அவை: ஆதார் அட்டை நிரந்தர கணக்கு எண் அட்டை (Pan Card) மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்று ஆவணம்
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம் இந்த லிங்கை https://t.co/qPcXq1StI2 பயன்படுத்தி உங்களின் வாக்குச்சாவடி விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்#SunNews | #VoteRight | #ElectionsWithSunNews pic.twitter.com/h1tCLh9oNE— Sun News (@sunnewstamil) April 18, 2024