உங்கள் துணிகளை, அதன் பொலிவு குறையாமல் நீண்ட காலம் பாதுகாப்பது எப்படி?
உங்களுக்கு பிடித்த ஆடை மிக விரைவில் அதன் பொலிவை இழக்கும் போது நிச்சயமாக அனைவரும் ஏமாற்றம் அடைந்திருப்போம். மங்கிப்போகும் நிறங்கள், மாறிப்போகும் உடைகளின் பிட்டிங், பல நேரங்களில் வெள்ளை நிற உடைகள் பழுப்படைவது போன்றவை, துணிகளால் தோய்ந்து விடுவதை உணர்த்தும். குறிப்பாக அதிக விலை கொடுத்து, உங்களுக்கு மனந்திற்கு மிகவும் பிடித்தமான உடைகள் இப்படி மாறுவதை பார்த்தால் விரக்தியாவதை தடுக்க இயலாது. ஆனாலும், நீங்கள் தினசரி செய்யும் சலவையில் சிறு மாற்றத்தை கொண்டுவந்தால், துணிகளின் ஆயுளை நீட்டலாம். பராமரிப்பு லேபிள்களை பின்பற்றவும்: உங்கள் ஆடைகளுடன் வரும் பராமரிப்பு லேபிள்கள், உங்கள் ஆடைகளை எவ்வாறு சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது என்பதற்கான அத்தியாவசிய வழிமுறைகளை வழங்குகின்றன. சேதத்தைத் தவிர்க்கவும் அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் உதவுகின்றன.
துணிகளின் பொலிவை காப்பாற்ற சில குறிப்புகள்
அடிக்கடி சலவை செய்யாதீர்கள்: துணிகளை ஒவ்வொரு முறை அணிந்த பிறகும் சலவை செய்வதை தவிருங்கள். குறிப்பாக, ஜீன்ஸ், ஸ்வெட்டர் போன்ற உடைகள் தினசரி சலவைக்கு ஏற்றதல்ல. 4 -5 முறை பயன்படுத்திய பிறகே துவைத்தாலே போதுமானது. உங்கள் ஆடைகள் அழுக்காகவோ அல்லது துர்நாற்றமாகவோ இல்லாவிட்டால், அவற்றைக் துவைப்பதற்கு முன் குறைந்தது மூன்று முறை அணிய முயற்சிக்கலாம். கெமிக்கல் நிறைந்த வாஷிங் பவுடர் பயன்பாட்டை குறைக்கவும்: வாசனைக்காக அதிகமாக வாஷிங் பவுடர் பயன்படுத்துவது தவறு. அதனால் துணிகளின் இழைகள் மற்றும் மிருது தன்மை பாதிக்கப்படும். மெஷ் பேக்-ஐ பயன்படுத்தவும்: வாஷிங் மெஷினில் மென்மையான துணிகளை துவைக்கும்போது, ஒரு மெஷ் பேக்-ஐ பயன்படுத்தவும். ஜரிகை வேலைப்பாடு மற்றும் எம்பிராய்டரி அதிகம் கொண்ட துணிகளை இது பாதுகாக்கும்.