மருத்துவம்: இரட்டை குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?
முன்னர் எல்லாம், இரட்டை குழந்தைகள் வேண்டி பெற்றோர்கள் கடவுளை வேண்டுவார்கள். ஒரே உருவத்தில் இருக்கும் அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு, ஒரே மாதிரியான டிரஸ், ஒரே ஒலி தரும் பெயர்கள் என பெற்றோர்கள் கனவில் இருப்பார்கள். அந்த மனநிலையை தான் 'ஜீன்ஸ்' திரைப்படத்தில் படம்பிடித்து காட்டியிருப்பார் இயக்குனர் ஷங்கர். என்னதான் கடவுளை வேண்டினாலும், அரிதாகத்தான் இரட்டை குழந்தைகள் பிறக்கும். அதற்கான அறிவியல் காரணங்கள் ஏராளம் கூறப்பட்டாலும், சமீப காலங்களில், இரட்டை குழந்தைகள் பிறப்பது அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் என்ன தெரியுமா? அதற்கு முக்கிய காரணம், செயற்கை கருத்தரித்தல் முறைகள் தான். செயற்கை கருத்தரித்தல் முறைகளில், IVF கருத்தரித்தல் , கருப்பை உருவகப்படுத்துதல் மற்றும் செயற்கை கருவூட்டல் ஆகியவற்றில் MAR-இன் அளவு அதிகரித்துள்ளதே காரணமாகும்.
இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு மற்ற காரணிகள்
குடும்ப வரலாறு: இரட்டையர்கள் பிறப்பதற்கு ஜீன்ஸ் முக்கிய காரணம். குறிப்பாக தாய் வழி குடும்பத்தில், இரட்டை குழந்தைகளுக்கான ஜீன்ஸ் இருந்தால், உங்களுக்கும் அந்த வாய்ப்பு அதிகம். வயது: 35 வயதிற்கு மேல் கருத்தரிக்கும் பெண்களுக்கு, இரட்டையர் பிறக்கும் வாய்ப்பு அதிகம். அதற்க்கு காரணம், 35 வயதிற்கு மேல், ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். அதனால், வளர்ச்சியடைந்த கரு முட்டைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. முந்தைய கர்ப்பம்: உங்களுக்கு முந்தைய பிரசவத்தில் இரட்டையர் பிறந்தால், அடுத்த பிரசவத்தில், இரட்டை குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம். எடை மற்றும் உயரம்: வினோதமாக இருந்தாலும், ஆராய்ச்சிகளின் படி, மற்ற பெண்களை விட, அதிக எடை மற்றும் உயரம் இருக்கும் பெண்களுக்கு, இரட்டை குழந்தைகள் பிறக்கிறதாம்.
இந்த காலவரிசையைப் பகிரவும்