அதிகம் அறியப்படாத இந்திய மசாலாப் பொருட்களின் மருத்துவ ரகசியங்கள்
இந்திய சமையலறைகளில் உள்ள பல பொருட்களில் மருத்துவக்குணம் கொண்டவையே. உதாரணத்திற்கு நமது சமையலறையில் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்த மஞ்சளின் மகத்தான மருத்துவ குணங்களை மேலை நாடுகள் தற்போதே அறிவியல் ரீதியாக உணர்ந்துள்ளனர். அதற்கு சமீபத்தில் புவியியல் சார்ந்த குறியீடும் தரப்பட்டது. அதேபோல இன்னும் சில மசாலாப் பொருட்களின் ஆரோக்கிய நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. மசாலா பொருட்கள் ருசிக்காக மட்டும் சேர்ப்பது இல்லை. அதன் மருத்துவ குணத்திற்காகவும், நமது உடல் ஆரோக்கியத்திற்காகவும் அவை பயன்படுத்தப்படுகிறது. அப்படி சில சமையல் பொருட்களின் மருத்துவ குணநலன்கள் பற்றி ஒரு தொகுப்பு
பெருங்காயம் - செரிமான சாம்பியன்
பெருங்காயம், பெரும்பாலும் இந்திய உணவுகளில் பாடப்படாத ஹீரோவாக இருப்பது பெருங்காயம் தான். தென்னிந்தியா சமையலில் இந்த பொருள் இன்றி அணுவும் அசையாது. அதன் முக்கிய அம்சமான உணவின் மேம்பாட்டை தவிர, இது செரிமான வலிமையைக் கொண்டுள்ளது. இது வயிற்றுப் பிரச்சினைகளைத் தணிக்கவும், வாயுவை எதிர்த்துப் போராடவும், ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் கூடிய இந்த பொருள், செரிமாணத்திற்கான யுனிவர்சல் தீர்வாக கருதப்படுகிறது.
கிராம்பு - இயற்கையின் மயக்க மருந்து
பொதுவாக இது உணவில் நறுமணத்தை கூட்டுவதற்காக சேர்க்கப்பட்டாலும், கிராம்பு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. யூஜெனால் நிறைந்த, கிராம்பு இயற்கையான மயக்க பண்புகளை உடையது. இந்த மசாலா பொருள் பல்வலியை நிவர்த்தி செய்வதில் சிறந்தது என பலரும் அறிந்திருப்பீர்கள். அது உணர்வின்மையை தூண்டுவதால், வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. சமையலறை தாண்டி, கிராம்பு, நோய்த்தொற்றுகள் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது. கிராம்பு, அதன் நறுமணத்துடன், சமையல் மற்றும் மருத்துவ அற்புதங்கள் என இரண்டையும் வெளிப்படுத்துகிறது.
ஏலக்காய் - சுவாச சக்தி
நறுமண மசாலாப் பொருட்களில் புகழ்பெற்றது ஏலக்காய். அது ஒரு சுவாச உதவியாக அறியப்படுகிறது. மேலும் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் சளி நீக்கும் குணங்களுக்கும், இருமல் மற்றும் மார்புச்சளியை நீக்கவும் பயன்படுகிறது. அதன் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக, ஏலக்காய் மாசு தொடர்பான ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. ஏலக்காயில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது சுவாச மண்டலத்தின் செயல்திறனை அதிகரிக்கிறது.
சீரகம் - டிடாக்ஸ் டைனமோ
நறுமணங்கள் சேர்க்கும் மசாலா பொருட்களில், தென்னிந்திய சமையல், வடஇந்திய சமையல் என பலவித சமையல்களில் ஆட்சி செய்வது சீரகம். அது ஒரு டிடாக்ஸ் டைனமோவாக செயல்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சீரகம், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதன் செரிமான நன்மைகள், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. கல்லீரலில் உள்ள நச்சு கலவைகளை நீக்க ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சீரகம் உணவின் சுவையை அதிகரிப்பதை தாண்டி முழுமையான ஆரோக்கியத்திற்கான கருவியாக செயல்படுகிறது.