அடிக்கடி கொட்டாவி வருகிறதா? அதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார்கள் நிபுணர்கள்
கொட்டாவி என்பது சோர்வு அல்லது சலிப்பு ஏற்படும் போது, உங்கள் உடல் தன்னிச்சையாக வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி. ஆனால், சோர்வு நிலையும் தாண்டி, அதிகமாக கொட்டாவி விடுவதாக கருதினால், அதற்கு பல காரணங்கள் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகமாக கொட்டாவி வருவதற்கான காரணங்களை அறிய தொடர்ந்து படியுங்கள். தூக்கமின்மை: பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதிகப்படியான கொட்டாவிக்கு முக்கிய காரணம் தூக்கமின்மை அல்லது தூக்க பற்றாக்குறை தான். தரமான தூக்கம் இல்லாததால் சோர்வு மற்றும் அசதி ஏற்படுகிறது. அது கொட்டாவியாக வெளிப்படுகிறது. அதிகமாக கொட்டாவி விடுவது தூக்கக் கோளாறுகள், தூக்கமின்மை, தூக்கத்தில் மூச்சுத்திணறல், சர்க்காடியன் ரிதம் கோளாறுகள் போன்றவற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
அதிகப்படியான கொட்டாவி மாரடைப்பு ஏற்படும் அறிகுறியாக இருக்கலாம்
மருந்தின் பக்க விளைவுகள்: நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாக, அதிகப்படியான கொட்டாவி வரலாம். குறிப்பாக, மனச்சோர்வு மற்றும் depression கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும், SSRIகள், அதிகப்படியான கொட்டாவியை ஏற்படுத்தும். நரம்பியல் கோளாறுகள்: நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகள், உங்களை அடிக்கடி கொட்டாவி விட வைக்கலாம். வலிப்பு நோய், ஒற்றைத் தலைவலி, மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், கொட்டாவி விடும்போது அவர்களின் நோய் அறிகுறிகளில் இருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும். இதய பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம்: அதிகப்படியான கொட்டாவி, இதயத்தைச் சுற்றி இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம். கொட்டாவியுடன், மூச்சுத் திணறல், மயக்கம் அல்லது குமட்டல் போன்ற பிற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.