தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் ஹுசைனின் மரணத்திற்கு காரணம் இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ்; அப்படியென்றால் என்ன?
தபேலா கலைஞரான ஜாகிர் ஹுசைன் சான் பிரான்சிஸ்கோவில் தனது 73 வயதில் நுரையீரல் பாதிப்பினால் ஏற்பட்ட ஒரு கடுமையான நாள்பட்ட நோயான இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸால் (idiopathic pulmonary fibrosis) காலமானார். தபேலா இசையால் உலகில் பலரையும் கவர்ந்த அந்த மாபெரும் கலைஞரின் மறைவு இந்த ஐபிஎஃப் நோயினை பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் என்றால் என்ன?
அமெரிக்காவின் தேசிய இதயம், நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம் (NIH) படி, இது ஒரு தீவிர நாள்பட்ட நுரையீரல் நோயாகும். இது உறுப்புகளில் உள்ள காற்றுப் பைகள் அல்லது அல்வியோலியைச் சுற்றியுள்ள திசுக்களை பாதிக்கிறது. அறியப்படாத காரணங்களால் நுரையீரல் திசு தடிமனாகவும் கடினமாகவும் இருக்கும் போது இந்த நிலை உருவாகிறது. காலப்போக்கில், இந்த மாற்றங்கள் நுரையீரலில் நிரந்தரமாக வடுவை ஏற்படுத்தும். இது ஃபைப்ரோஸிஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு நபருக்கு சுவாசிப்பதை படிப்படியாக கடினமாக்குகிறது. புகைபிடிக்கும் பழக்கம் அல்லது IPF இன் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களுக்கு இந்த நோய் அதிகளவில் தாக்கக்கூடும். மேலும் இந்த ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது.
IPF க்கான ஆபத்து காரணிகள்
IPF ஒரு நபரை பாதிக்க மேலே குறிப்பிட்டதுடன் சேர்த்து பல காரணிகள் இருக்கலாம். வயது: ஒரு நபர் வயதாகும்போது, அவர்களுக்கு இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. பெரும்பாலான மக்கள் 60-70களில் இந்த நோயால் கண்டறியப்படுகிறார்கள். வாழ்க்கை முறை: புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு IPF பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. பாலினம்: இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் பெண்களை விட ஆண்களுக்கு மிகவும் பொதுவானது. குடும்ப வரலாறு மற்றும் மரபணுக்கள்: ஒரு தனிநபரின் உடனடி உறவினர், பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர் யாருக்கேனும் IPF இருந்தால், அவர்கள் தானாகவே நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஒரு நபர் மரபுரிமையாகப் பெறும் மரபணுக்கள், குறிப்பாக மரபணுக்கள் பிறழ்வுகளைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு IPF உருவாக அதிக வாய்ப்புள்ளது.
இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் உள்ளவர்கள் அனுபவிக்கக்கூடிய அறிகுறிகள்
மூச்சுத் திணறல்: NIHபடி, ஆரம்பக்கட்டத்தில் ஒரு நபர் சுறுசுறுப்பாக இருக்கும்போது கூட சுவாசிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருக்கலாம். நாளாக, சுவாச பிரச்சனைகள் அதிகரிக்கும், அதாவது ஒரு நபர் ஓய்வில் இருக்கும்போது கூட சுவாசிப்பது கடினமாக இருக்கும். நீண்ட கால வறட்டு இருமல்: முன்னேற்றமடையாத வறட்டு இருமல் ஒரு அறிகுறியாகும். ஒருவரால் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் இருமல் வருவதும் இதில் அடங்கும். சுவாசிப்பதைப் போலவே, இருமல் காலப்போக்கில் மோசமாகலாம். மூட்டுகள் மற்றும் தசைகளில் வலி: ஒரு நபரின் மூட்டுகள் மற்றும் தசைகளில் ஏற்படும் வலி, சாதாரணமாகத் தோன்றினாலும், அது IPFஇன் அறிகுறியாக இருக்கக்கூடும். சோர்வாக அல்லது பலவீனமாக உணர்தல் எடை இழப்பு: ஒரு நபர் IPF நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உடல் எடை குறையக்கூடும்.
IPF க்கான சிகிச்சை என்ன?
தற்போது வரை, இந்த இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸுக்கு எந்த சிகிச்சையும் இல்லை. இருப்பினும், மருந்துகள், நடைமுறைகள் அல்லது பிற சிகிச்சைகள் மூலம் நுரையீரல் பாதிப்பைக் குறைக்க முடியும். மருந்துகள்: அமெரிக்காவின் என்ஐஎச் படி, நிண்டெடானிப் அல்லது பிர்ஃபெனிடோன் நுரையீரல் சிறப்பாக செயல்பட உதவும். மற்ற சிகிச்சைகளில் ஆக்ஸிஜன் சிகிச்சை அடங்கும். இது மூச்சுத் திணறலைக் குறைக்க உதவுகிறது மற்றும் உடற்பயிற்சி திறன்களை மேம்படுத்துகிறது. இறுதியாக, அறுவை சிகிச்சை. நாள்பட்ட IPF உள்ள சிலருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒரு விருப்பமாக இருக்கலாம். நோய் தொற்றை தவிர்க்க, புகைபிடிப்பதை விட்டுவிடுதும், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் போன்ற ஆரோக்கியமான மாற்றங்களைத் தேர்ந்தெடுப்பது உதவும்.