பிரபல தபேலா வித்வான் ஜாகிர் உசேன் தனது 73வது வயதில் காலமானார்
உலகப் புகழ்பெற்ற தபேலா வித்வான் உஸ்தாத் ஜாகீர் உசேன் தனது 73வது வயதில் காலமானார். அவர் கடுமையான உடல்நலக்குறைவுக்காக சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அறிக்கைகளின்படி, இசைக்கலைஞர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் எனவும், குறிப்பாக அவர் இதயம் மற்றும் நுரையீரல் சிக்கல்கள் காரணமாக ICU இல் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு காலமானார்.
ஹுசைனின் குடும்பம் அவருடன் அமெரிக்காவில் உடனிருந்தது
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மாலை, ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் ஒரு ஆதாரம் கூறியதன்படி, "இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது மற்றும் மருத்துவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இல்லை என தெரிந்தது, அவரது முழு குடும்பமும் இந்தியாவிலிருந்து அவருடன் இருக்க அமெரிக்கா விரைந்தது". ஹுசைனின் கடைசி இன்ஸ்டாகிராம் இடுகை கடந்த அக்டோபர் 29 அன்று போடப்பட்டது. அதன்பின்னரே, அவரது உடல் நிலை மோசமடைந்தது. மேலும் அவர் ஜனவரி 2025 இல் திட்டமிடப்பட்ட தனது இந்திய சுற்றுப்பயணத்திற்கும் தயாராகி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஹுசைனின் புகழ்பெற்ற வாழ்க்கை மற்றும் சமீபத்திய கிராமி வெற்றிகள்
1951 இல் மும்பையில் பிறந்த ஹுசைன், தனது தந்தை, புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்காவால் மூன்று வயதில் இந்த தாள வாத்தியத்திற்கு அறிமுகப்படுத்தபட்டார். அவர் தனது முதல் கச்சேரியை ஏழு வயதில் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் உள்ளிட்ட மதிப்புமிக்க விருதுகளால் அவர் கௌரவிக்கப்பட்டார். இந்த ஆண்டு, பேலா ஃப்ளெக், எட்கர் மேயர் மற்றும் ராகேஷ் சௌராசியா ஆகியோருடன் பாஷ்டோவுக்கான சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி உட்பட மூன்று கிராமி விருதுகளை வென்றார்.