Page Loader
குடியரசு தின விழா 2023: டெல்லியில் நடைபெறப்போகும் 'R-Day Parade','The Beating Retreat' விழா பற்றி தகவல்கள்
குடியரசு தின அணிவகுப்பு, பீட்டிங் தி ரிட்ரீட் விழா பற்றிய தகவல்கள்

குடியரசு தின விழா 2023: டெல்லியில் நடைபெறப்போகும் 'R-Day Parade','The Beating Retreat' விழா பற்றி தகவல்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2023
09:04 pm

செய்தி முன்னோட்டம்

வரும் ஜனவரி 26 -ஆம் தேதி, இந்தியா தனது 74 -வது குடியரசு தினத்தை கொண்டாடவிருக்கிறது. இந்த நாளில்தான், முன்னாள் பிரிட்டிஷ் காலனிய அரசு, நம் நாட்டின் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட, சொந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. இந்நாளை கொண்டாட, டெல்லியில் உள்ள கர்தவ்யா (முன்னதாக ராஜ்பாத்) பாதையில், குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும். இவ்விழா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. மறுபுறம், 'பீட்டிங் ரெட்ரீட்' விழா என்பது, குடியரசு தின கொண்டாட்டத்தின் மூன்றாம் நாளின் முடிவில், ஜனவரி 29 ஆம் தேதி நடைபெறும். இவ்விழாவில், இந்தியா பாதுகாப்பு துறையின், மூன்று பிரிவுகளான - விமானப்படை, இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றின் இசைக்குழுக்கள் பங்கு பெறும்.

குடியரசு தின அணிவகுப்பு

இவ்விரண்டு விழாக்களையும் எவ்வாறு காணலாம்?

குடியரசு தின அணிவகுப்பு மற்றும் பீட்டிங் ரிட்ரீட் விழாவை தொலைக்காட்சி நேரலையில் பார்க்கலாம். அதுமட்டுமின்றி, பொதுமக்கள் நேரில் வந்து இவ்விழாவை கண்டு ரசிக்க, பாதுகாப்புத்துறை அனுமதிக்கிறது. பீட்டிங் ரிட்ரீட் விழாவிற்கு நுழைவுக் கட்டணம் இல்லை. ஆனால், குடியரசு தின அணிவகுப்புக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கலாம். aamantran.mod.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, உங்கள் பெயரில் ஒரு கணக்கை உருவாக்கி, குடியரசு தின அணிவகுப்புக்கான டிக்கெட்டுகளை வாங்கலாம். இந்த டிக்கெட்டுகளை, ஜனவரி 24 வரை காலை 10 மணி முதல் 12:30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும் வாங்கலாம், என அமைச்சகம் தெரிவிக்கிறது.