Rooh Afza: கோடை காலங்களில் நம் தாகத்தை தணிக்கும் இந்த பழம்பெரும் பானத்தின் வரலாறு தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
வெயில் காலம் வந்துவிட்டது. வெளியே சென்றால், வெயிலின் தாக்கத்தால் சரும பாதிப்பு ஏற்படுகிறது. சரி, வீட்டின் உள்ளேயே இருக்கலாம் என்றாலும், வீடு முழுக்க AC போட்டால் தான் ஆச்சு என்பது போல சூரிய பகவான் கொளுத்துகிறார்.
"ஏப்ரல் தொடங்கி ஒரு நாள் தான் ஆகியுள்ளது. இப்போவே இப்படி காட்டுன, கத்திரி வெயில் எல்லாம் எப்படி இருக்குமோ!" என மக்கள் புலம்புவதை கேட்க முடிகிறது.
இது போன்ற வெயிலில் இருந்து நம்மை பாதுகாக்க பல இயற்கை பானங்கள் உண்டு.
அதிலும் குறிப்பாக இப்தார் விருந்துகளில் தரப்படும், அழகிய இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு பானத்திற்கு அடிமையாகாதவர்களே இல்லை எனலாம். அது தான், ரூஅப்சா. இது பல ஆண்டுகளாக நம் நாட்டில் இருக்கும் பிரபல பானம்.
கோடை காலம்
கோடைகால பானம் இந்த சர்பத்
இந்த பானத்தை, 1907இல், யுனானி மற்றும் இயற்கை மருத்துவரான ஹக்கீம் அப்துல் மஜீத் என்பவர் கண்டுபிடித்தாக கூறப்படுகிறது.
ரூஅப்சா என்றால், 'ஆன்மாவிற்கு ஆறுதல்' என்று பொருள்படும்.
கண்ணாடி பாட்டிலில் வரும் இந்த பானத்தில், மூலிகைகள், பூக்கள், சத்தான காய்கறிகள் என 16 மூலப்பொருட்கள் மூலம் பெறப்பட்ட கலவையாக வருகிறது. இது உடலுக்கு ஆரோக்கியத்தையும், வெயிலினால் ஏற்படும் கோளாறுகளையும் தவிர்க்கிறது.
இதோடு, புதினா, தர்பூசணி, கீரை, தாமரை இதழ்களும் சேர்த்து தயாரிக்கப்படும்.
இந்த ஆரோக்கிய பானம், தற்போது பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
கேக், பிரௌனி, லஸ்ஸி என இதனை பல உணவு தயாரிப்புகளில் பயன்படுத்துகின்றனர்.