'பிகா'வை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அது ஒரு வகையான உணவு கோளாறு
செய்தி முன்னோட்டம்
உணவை உண்பது, உண்ணாமல் இருப்பது என்பதையும் தாண்டி, உணவு கோளாறுகளில் பல வகை உள்ளது. கட்டுப்பாடின்றி உணவு உண்பது, அதீத உணர்ச்சிகள், மன அழுத்தம், அதிர்ச்சி போன்றவற்றை சமாளிக்க உணவு உண்பது போன்றவையும் உணவு கோளாறுகளில் ஒரு வகை.
இந்த வகை கோளாறுகள், உங்களை அறியாமல் தோன்றுவது. ஆனால் அவை, உங்கள் உடல் ஆரோக்கியம், நல்வாழ்விற்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும்.
அத்தகைய ஒரு வினோதமான உணவுக் கோளாறு தான் பிகா.
பிகா என்பது ஒரு நபர், களிமண், ஐஸ், காகிதம், சாக்பீஸ் போன்ற ஊட்டச்சத்து இல்லாத, உணவு அல்லாத பொருட்களை, தொடர்ந்து சாப்பிட தோன்றும் ஒரு நிலை.
இந்த கோளாறு பொதுவாக குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது.
உணவு கோளாறு
குழந்தைகளை பாதிக்கும் பிகா
பிகா கோளாறால், பல்வேறு சிக்கல்கள் உண்டாகலாம். குடல் அடைப்பு, ஒட்டுண்ணி தொற்று, விஷம் மற்றும் பல் சேதம் ஆகியவை அடங்கும்.
உணவு அல்லாத பொருட்களை சாப்பிடுவது, ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். இது இரத்த சோகை, சோர்வு மற்றும் பலவீனமான அறிவாற்றல் செயல்பாடு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பிகா எதனால் ஏற்படுகிறது என இன்றுவரை சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் இது உடலியல், உளவியல், சமூக மற்றும் கலாச்சார காரணிகளின் கலவையாக நம்பப்படுகிறது. சில நேரங்களில் இரும்பு, துத்தநாகம் அல்லது கால்சியம் குறைபாடுகள் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் தொடர்புடையது என்றும் நம்பப்படுகிறது.
இந்த வகை உணவு கோளாறுகள் மற்றும் சிக்கலை சமாளிக்க, உளவியல் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை நாடலாம்.