இந்தியாவின் இளம் வயது உறுப்பு தானர்; தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த 17 வயது கேரளா சிறுமி
கேரளாவைச் சேர்ந்த, 17 வயது சிறுமி தேவானந்தா. அவள், தனது கல்லீரலின் ஒரு பகுதியை, நோய்வாய்ப்பட்ட தனது தந்தைக்கு தானமாக தந்து, நாட்டின் மிக இளைய உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தியா டுடே படி, திருச்சூரில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில், சென்ற பிப்ரவரி 9ஆம் தேதி, இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. தேவானந்தாவின் தந்தை பிரதீஷ், ஹெபடோசெல்லுலர் புற்றுநோயால் (கல்லீரல் புற்றுநோய்) பாதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட மருத்துவ கவனப்பில், அவரது உடல்நிலை முன்னேற்றம் அடையவில்லை. உறுப்புதானத்திற்கு, நன்கொடையாளர்களை தேடிவந்த நிலையில், தன் தந்தைக்கு உறுப்பு தானம் செய்ய, தேவானந்தா முன்வந்துள்ளார். ஆனால், சட்டப்படி, பதின்பருத்தில் உள்ளவர்கள் உறுப்புதானம் செய்யக்கூடாது. அதனால், அவர், கேரளா மாநிலத்தின் நீதிமன்றத்தை நாடினார்.
கல்லீரலை தானம் செய்த மகள்
தந்தைக்காக தானம் செய்த மகள்
தேவானந்தாவின் வழக்கு, அவருக்கு சாதகமாக முடிந்தது. இந்நிலையில், தன் தந்தைக்கு உறுப்பு மாற்றம் செய்ய ஏதுவாக , தன்னுடைய வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டுவந்தார், தேவானந்தா. உணவு மாற்றம், உடற்பயிற்சி என தன்னை தயார் செய்துகொண்டு, மருத்துவமனைக்கு வந்தார் தேவானந்தா. ராஜகிரி மருத்துவமனையில், பல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தலைவர், டாக்டர் ராமச்சந்திரன் நாராயண்மேனன் தலைமையிலான அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருந்த பிறகு, 17 வயதான அவர் பிப்ரவரி-19, ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.