மருத்துவம்: ரத்த தானத்தை சுற்றி உலவும் ஆதாரமற்ற கட்டுக்கதைகள்
செய்தி முன்னோட்டம்
உயிர்காக்கும் ரத்த தானம், உலகின் சிறந்த தனமாக கருதப்படுகிறது. இருப்பினும் அதை சுற்றி பல ஆதாரமற்ற கட்டுக்கதைகள் நிலவுகின்றன. அந்த கட்டுக்கதைகள் பட்டியல் இதோ:
கட்டுக்கதை 1: இரத்த தானம் செய்வதால் நோய்வாய்ப்படுவீர்கள்
இரத்த தானம் செய்யும்போது உங்கள் உடல்நலம் பாதிக்கப்படாது. மாறாக, நன்கொடையாளர்களுக்கு ஒரு நாள் ஓய்வு தேவைப்படுமே தவிர, ஆரோக்கிய பின்னடைவு எதுவும் நேராது.
கட்டுக்கதை 2: மருந்து உட்கொள்பவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது
இதை முற்றிலுமாக கட்டுக்கதை என ஒதுக்கி விடமுடியாது. எனினும், ஆன்டிபிளேட்லெட், ஆன்டிகோகுலண்டுகள் மற்றும் தோலுக்கான சிகிச்சைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்பவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது. ஆனால், அதை உங்கள் மருத்துவர் தான் தீர்மானிக்க சரியான நபர்.
மருத்துவம்
ரத்ததானம் பற்றிய கட்டுக்கதைகள்
கட்டுக்கதை 3: இரத்த தானம் ஒரு வேதனையான செயல்
ரத்தத்தை எடுப்பதற்காக, ஊசியேற்றும் போது மட்டுமே லேசான வலி உண்டாகும் தவிர, அதுவும் சில நொடிகளில் மறைந்து விடும் அளவிற்கே இருக்குமே தவிர, வேதனை மிக்கதாக இருக்காது.
கட்டுக்கதை 4: பச்சை குத்திக்கொண்டவர்கள் தானம் செய்ய முடியாது.
பச்சை குத்திக்கொண்டவர்களும், உடம்பில் piercing செய்தவர்களும் ஆறு மாதங்களுக்கு ரத்த தானம் செய்யமுடியாது. இது நோய் தொற்று பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதப்படுகிறது.
கட்டுக்கதை 5: வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரத்த தானம் செய்ய முடியும்
ஒரு முறை ரத்ததானம் செய்த பின், இயல்பு நிலைக்கு வருவதற்கு, நான்கு-எட்டு வாரங்கள் ஆகும். அப்படி பார்க்கும் போது, வருடத்திற்கு, 24 முறை கொடுக்கலாம்.