வாக்கிங் செல்லும் போது முழு பயனை பெற இதை கட்டாயம் ஃபாலோ செய்யணும்!
நடைபயிற்சி, உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எளிமையான மற்றும் செலவில்லாத பயிற்சியாகும். இது உடல்நலம் மற்றும் மனநலத்திற்கும் பலனளிக்கின்றது. ஆனால், நடைபயிற்சியை முறையாக செய்ய வேண்டும், இல்லையெனில் அதன் முழு பலன்களை பெற முடியாது. இந்த கட்டுரையில், நடைபயிற்சியில் செய்யக்கூடிய சில பொதுவான தவறுகள் மற்றும் அவற்றை எப்படி சரிசெய்யலாம் என்பதைக் காணலாம்:
நடைப்பயிற்சியில் போது முக்கியான விஷயம் உங்கள் தோரணை
செல்போன் பயன்படுத்தி நடைபயிற்சி செய்யும்போது, உங்கள் தோரணை மாறி, கவனத்தை இழக்கலாம். இது தசைப்பிடிப்பு மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தும். அதை தவிர்க்க, செல்போனைப் பயன்படுத்தாமல், நேராக நிமிர்ந்தபடி, கைகளை சுறுசுறுப்பாக வீசி நடக்க வேண்டும். இது உடலின் சமநிலையை சீராக்கும். சரியான காலணி: பொருத்தமற்ற காலணிகள் அணிந்தால், கால் வலி, மூட்டு வலி அல்லது கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். சிலருக்கு பாதங்களில் வலி எடுக்கக்கூடும். அதைதவிர்க்க, பொருத்தமான காலணிகளை அல்லது ஷூக்களை அணியுங்கள். இது கால் மற்றும் மூட்டு வலிகளை தவிர்க்க உதவும்.
உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்
அதிக நேரம் வாக் போவதால், வியர்க்கும், நீரிழப்பு ஏற்படும். இது உடல் செயல்பாடு குறைந்து நோய்களுக்குள்ளாக்கப்படலாம். அதனால் நடைபயிற்சி செய்யும் போது, தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். உடல் நீரேற்றமாக இருக்க வேண்டும். நடைபயிற்சிக்கு முன்பும் பின்பும் ஸ்ட்ரெச்சிங் செய்யாமல் இருந்தால், தசைகள் இறுக்கமாகி விடும். இதனால் உங்களால் இலகுவாக நடக்க முடியாமல் போகலாம். இதை தவிர்க்க, நடைபயிற்சி செய்யும் முன்பும் பின்பும், உடலை நெகிழ்வு தன்மையில் வைத்திருக்க ஸ்ட்ரெச்சிங் செய்ய வேண்டும்.