உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய ஜப்பானிய கருத்துக்கள்
ஜப்பானிய மக்கள், சுறுசுறுப்பிற்கும், நிறைவான வாழ்க்கைக்கும் பெயர் போனவர்கள் என அறியப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை முறை, தத்துவ சிந்தனைகளால் நிறைந்தது. அதை நடைமுறை படுத்தியும் வருகிறார்கள். இந்த தத்துவங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய சில ஜப்பானிய கருத்துக்கள் இங்கே உள்ளன. கைசென் (Kaizen)- தொடர்ச்சியான முன்னேற்றம்; "தொடர்ச்சியான முன்னேற்றம்" என்று மொழிபெயர்க்கப்படும் கைசென், எப்போதும் நின்றுவிடாமல், தொடர்ந்து முன்னேறுவதை வலியுறுத்தும் சிந்தனை முறை ஆகும். சிறிது சிறிதாக, நிலையான மற்றும் பயனுள்ள மேம்பாடுகள், குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும் என்பதுதான் அடிப்படை கருத்து. ஏற்கனவே இந்த கருத்து, தொழில் நிறுவனங்களிலும், மேலாண்மை சூழல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
இக்கிகை உங்கள் வாழ்க்கையை தொடர ஒரு உந்துசக்தி
வபி-சபி (Wabi-sabi): குறைபாடுகளை ஏற்றுக்கொள்வது; இது நமது சுற்றுச்சூழலை மிகவும் ஆழமாகப் பாராட்டவும், படைப்பாற்றலை மேம்படுத்தவும், நல்வாழ்வு உணர்வை அதிகரிக்கவும் உதவுகிறது. ஷின்ரின்-யோகு(Shinrin-yoku): வனக் குளியல்; ஷின்ரின்-யோகு என்பது ஒரு உடலியல் மற்றும் உளவியல் பயிற்சியாகும், அதாவது, காட்டில் நேரத்தை செலவிடுவது, அதன் வழியாக உட்கார்ந்து உடற்பயிற்சி செய்வது அல்லது சுற்றித் திரிவது. இதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் இருந்து உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை பல நன்மைகள் உண்டு. இக்கிகை (Ikkigai)- வாழ்வின் ஆதாரம்; ஜப்பானிய மொழியில், "இக்கிகை" என்ற வார்த்தையின் அர்த்தம் "உலகில் வாழ்வது ஒரு நோக்கத்தை கொண்டுள்ளது". அந்த நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் நாளை தொடங்க, அது ஒரு உந்துசக்தியாக இருக்கும்.