Page Loader
அவ்வப்போது 'சுயநல' உணர்வு தலைதூக்குகிறதா? தவறேதுமில்லை
அவ்வப்போது சுயநலமாக யோசிப்பதில் தவறேதுமில்லை

அவ்வப்போது 'சுயநல' உணர்வு தலைதூக்குகிறதா? தவறேதுமில்லை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 03, 2023
06:38 pm

செய்தி முன்னோட்டம்

உங்கள் ஆரோக்கியத்தின் மீதும், மனநிம்மதியின் மீதும் 'சுய-நல'மாக இருப்பதில் தவறேதுமில்லை. மற்றவர் நல்வாழ்வை காயப்படுத்தாமல், உங்கள் நலனின் மீது அக்கறை கொள்வது, குற்றமில்லை. எந்த சூழ்நிலைகளில் நீங்கள் சுயநலத்தோடு செயல்படலாம் என்பதை குறித்த சிறு தொகுப்பு: உங்கள் தூக்கத்தை கெடுத்தால்: உடலும், மூளையும் சரியாக செயல்பட, இரவு நேரம், நல்ல தூக்கம் முக்கியம். உங்கள் தூக்கத்தை கெடுக்கும் வகையில் யாரேனும், செயல்பட்டால், நீங்கள் சுயநலனோடு அவர்களை தவிர்க்கலாம். ஒர்க-லைப் பாலன்ஸ் தடைபடும் போது: அலுவல் நேரத்தை தவிர, உங்கள் அலுவலக பணிகளை தொடர வேண்டுமா என்பதை, அதன் முக்கியத்துவமே உணர்த்தும். உங்களை பணி நேரங்கள் தவிர, வாடிக்கையாளர் யாரேனும் தொடர்புகொண்டால், அவர்கள் அழைப்பை நிராகரிக்கலாம். ஆரோக்கியமான ஒர்க்-லைப் பாலன்ஸ் என்பது, சுயநலம் அல்ல.

மனநலம்

தவறான உறவை விட்டு வெளியேறுவது சுயநலமன்று!

உங்களை, தங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் போது: ஒரு சிலர், தங்களின் தேவைக்கு மட்டும், உங்களையும் உங்கள் உடமைகளையும் பயன்படுத்திவிட்டு, நீங்கள் உதவி கேட்கும் நேரத்தில் உதவ மறுப்பார்கள். அத்தகைய நபர்களிடம் சுயநலமாக இருப்பதில் தவறில்லை. அந்த நபர்களின் தொடர்புகளை முற்றிலுமாக துண்டிக்க முடியாவிட்டால், விலகி இருக்கலாம். உடல்நிலை சரியில்லாத நேரத்தில், உதவ முடியாவிட்டால்: உங்கள் உடல்நிலை மோசமாக இருக்கும் நேரத்தில், உங்கள் உதவியை நாடி வரும் யாருக்கேனும், உங்களால் நேரில் சென்று உதவ முடியவில்லை என்றால், வருத்தமடைய வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும். தவறான உறவை விட்டு வெளியேறும் போது: இறுதியாக, தவறான உறவை விட்டு வெளியேறுதல் இருவருக்குமே மனதளவிலும், உடலளவிலும் நல்லது. வருந்தவேண்டியதில்லை.