வைரல் செய்தி: ஒரு மாதத்திற்கு, மூன்று வேளையும் பீட்ஸா சாப்பிட்டு உடல் எடையை குறைத்த மனிதன்
அடிக்கடி பீட்ஸா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறக்கேட்டு இருப்பீர்கள். அதிகமாக எடை கூடுகிறது என்றாலும், இது போன்ற ஜங்க் உணவுகளை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறக்கேட்டு இருப்பீர்கள். ஆனால், அயர்லாந்து நாட்டை சேர்ந்த ரியான் மெர்சர் என்பவர், ஒரு மாதம் முழுவதும், மூன்று வேளையும் பீட்ஸா சாப்பிட்டு, உடல் எடை குறைத்ததாக கூறியுள்ள செய்தி ஒன்று வைரல் ஆகி வருகிறது. ரியான், ஒரு நாளைக்கு 10 பீட்ஸா துண்டுகளை சாப்பிட்டதாகவும், பீட்ஸாவைத் தவிர மற்ற ஜங்க் உணவுகள் அனைத்தையும் கைவிட்டாதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பீட்ஸாவை அவரே, அவரின் தேவைக்கேற்ப தயார் செய்ததாகவும், இதன் மூலம் உடம்பிற்கு தேவையான ப்ரோடீன்களை அதில் சேர்த்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.