Page Loader
உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில விளையாட்டுகள்
வேகமாக உடல் எடை குறைய உதவும் விளையாட்டுகள்

உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில விளையாட்டுகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 24, 2023
02:00 pm

செய்தி முன்னோட்டம்

உடற்பயிற்சியும், உணவு முறை மாற்றங்களும், சில நேரங்களில் மெதுவாக தான் உடல் எடையை குறைக்கும். ஆனால் நீங்கள் விளையாட்டுப் பிரியராக இருந்தால், உங்கள் தினசரி உடற்பயிற்சியுடன், சில விளையாட்டுகளையும் விளையாடும் போது, உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுவதுடன், வேகமாக உடல் எடையும் குறையும். ரன்னிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுடன் பின்வரும் விளையாட்டுகளையும் விளையாடலாம். குத்துச்சண்டை: அதிக ஆற்றல் தேவைப்படும் விளையாட்டுகளில் ஒன்றான குத்துச்சண்டை, உங்கள் உடல் வலிமையை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இந்த விளையாட்டில், உடலில் உள்ள அனைத்து தசைகளும் செயல்படுவதால், கலோரிகள் விரைவில் எரிந்து, உடல் எடை குறைகிறது. ஒரு மணிநேர குத்துச்சண்டை, 800-1000 கலோரிகளை எரிக்கிறது.

விளையாட்டு

தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் நீச்சல்

கூடைப்பந்து: 4 - 5 உடற்பயிற்சிகளை ஒன்றிணைத்து போல இருக்கும் இந்த விளையாட்டில், ஓடுதல், குதித்தல், கால்களை அசைத்தல் மற்றும் கைகளை நீட்டுதல் ஆகியவை அடங்கும். இந்த விளையாட்டு, உடல் எடை இழப்பிற்கு உதவுவது மட்டுமல்லாமல், நீங்கள் உயரமாக வளரவும் உதவுகிறது. ஒரு மணி நேரம் கூடைப்பந்து விளையாடுவதன் மூலம், நீங்கள் சுமார் 576 கலோரிகளை எரிக்கலாம். நீச்சல்: முழு நீள உடற்பயிற்சியாக கருதப்படும் விளையாட்டு, இந்த நீச்சல் விளையாட்டு. இது உங்கள் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். அதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடலமைப்பை மேம்படுத்துகிறது. சிறந்த ஏரோபிக் பயிற்சியாக கருதப்படும் நீச்சல் விளையாட்டில், உங்கள் இதய ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. ஒரு மணிநேர நீச்சல், 400-500 கலோரிகளை எரிக்கிறது.