NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இன்று சர்வதேச தண்ணீர் தினம்: நிலையான நீர் மேலாண்மைக்கான வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்
    வாழ்க்கை

    இன்று சர்வதேச தண்ணீர் தினம்: நிலையான நீர் மேலாண்மைக்கான வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்

    இன்று சர்வதேச தண்ணீர் தினம்: நிலையான நீர் மேலாண்மைக்கான வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 22, 2023, 08:51 am 1 நிமிட வாசிப்பு
    இன்று சர்வதேச தண்ணீர் தினம்: நிலையான நீர் மேலாண்மைக்கான வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்
    இன்று சர்வதேச தண்ணீர் தினம்

    ஆண்டுதோறும், மார்ச் 22 அன்று, 'சர்வதேச தண்ணீர் தினம்'மாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், தண்ணீரின் முக்கியத்துவம் பற்றியும், தண்ணீரின் சேமிப்பு, நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பை வலியுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களுக்கு நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வும் தரப்படும். 2030க்குள், அனைவருக்கும் பாதுகாப்பான தண்ணீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதை இலக்காகக் கொண்ட 'ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு 6'-ஐ நோக்கியே, இந்த சர்வதேச தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1992-ஆம் ஆண்டு, ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் போது தான் முதல்முதலில், சர்வதேச தண்ணீர் தினம் பற்றிய யோசனை பரிந்துரைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதலே, மார்ச் 22-ஐ உலக தண்ணீர் தினமென கொண்டாடுகிறார்கள்.

    நிலையான நீர் மேலாண்மைக்கான வழிகள்

    மழைநீர் சேகரிப்பு: மழைநீர் சேகரிப்பு என்பது பூங்காக்கள், சாலைகள், திறந்தவெளி மைதானங்கள்,கூரைகள் போன்றவற்றில் இருந்து வீணாக வடியும் மழைநீரைச் சேகரித்து, சேமித்து, சுத்திகரித்து, பிற்காலப் பயன்பாட்டிற்காக சேமித்து வைப்பதாகும். தமிழ்நாட்டில் அனைத்து கட்டடங்களிலும் தற்போது, மழைநீர் சேகரிப்பு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏரேட்டர்கள்: ஏரேட்டர் என்பது ஒரு சிறிய இணைப்பு சாதனமாகும். இது ஒரு குழாயின் முடிவில் பொருத்தப்படுகிறது. இந்த நீர் சேமிப்பு சாதனங்கள், குழாய் வழியாக பாயும் நீரின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. அதோடு,நீரின் அழுத்தத்தை பராமரிக்கின்றன. IoT மீட்டர்கள்: இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) மூலம் இயக்கப்பட்ட ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்கள், தண்ணீர் நுகர்வோர் தங்கள் சரியான நீர் பயன்பாட்டைக் கண்காணிக்கவும், தேவைக்கேற்ப அதைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்

    உலகம்

    புதுமைகளை முன்னெடுக்கும் உலகின் டாப் 50 நிறுவனங்கள்.. டாடா குழுமத்திற்கு 20வது இடம்! டாடா
    இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம்  உலக செய்திகள்
    AI குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள்.. சாட்ஜிபிடி மீது விசாரணை தொடுக்கும் கனடா! சாட்ஜிபிடி
    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு சீனா

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023