
சர்வதேச தினை ஆண்டு! 5 வகையான திணைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பரிந்துரையை ஏற்று, 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த வகை சிறுதானிய உணவுகள், நம்நாட்டின் தட்பவெப்பநிலைக்கு ஏற்றது மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
இந்த சிறுதானியங்கள் தான், மனிதனால் முதல்முதலில் வளர்க்கப்பட்ட தானிய வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நற்குணங்கள் நிறைந்த, சில வகை சிறு தானியங்களைப்பற்றி பார்க்கலாம்:
தினை அரிசி: இந்த வகை சிறுதானியங்கள், இரத்ததின் சர்க்கரை அளவை சமப்படுத்த உதவுகிறது. மேலும், இது இரத்த அழுத்த அளவை சமன்படுத்துவதில் திறமையாக செயல்படுகிறது. இரும்புச் சத்து நிறைந்த இந்த அரிசிவகை, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பித்தப்பைக் கற்களின் அபாயத்தையும் குறைக்கும்.
சிறுதானிய வகைகள்
உடலுக்கு நன்மை தரும் சிறுதானிய வகைகள்
குதிரைவாலி: உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு குதிரைவாலி சரியான தேர்வாகும். நார்ச்சத்து நிறைந்த, இந்த சிறுதானிய வகை, உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது, உங்கள் எலும்பின் அடர்த்தியையும் கூட்டுகிறது.
பனிவரகு: இந்தத் தினையில் லெசித்தின் மூலம் நிறைந்திருப்பதால், உங்கள் நரம்பு மண்டலத்திற்கு நல்லது.
மேலும், இதில் பலவிதமான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வயதாகும் அறிகுறிகளை நீக்குகிறது. மேலும், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
வரகரிசி: இது கோதுமைக்கு சிறந்த மாற்றாகும். மேலும், இதில் வைட்டமின் B6, நியாசின் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது எளிதில் ஜீரணமாகக்கூடியது.